ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் எம்.எல்.ஏ என்னுடைய முகத்தில் பேப்பரை வீசி எறிந்தார்! குமாரசாமி வேதனை

காங்கிரஸ் எம்.எல்.ஏ என்னுடைய முகத்தில் பேப்பரை வீசி எறிந்தார்! குமாரசாமி வேதனை

குமாரசாமி

குமாரசாமி

எடியூரப்பாவை முதல்வராக்கி, தான் எதிர்க் கட்சி தலைவர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதுதான் சித்தராமையாவின் நோக்கம்’

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  காங்கிரஸ் எம்.எல்.ஏ என் முகத்தில் பேப்பர் கட்டுகளை தூக்கி எறிந்தார் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

  கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மதச்சார்பற்ற கூட்டணி அரசு கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. அதனையடுத்து, எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைந்துள்ளது. கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் காங்கிரஸை விமர்சனம் செய்துவருகின்றனர்.

  ஒரு வாரத்துக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து பேசிய மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரான தேவகவுடா, ‘கர்நாடகாவில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி முறிவடைந்து ஆட்சி கவிழ்ந்ததற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாதான் காரணம். எடியூரப்பாவை முதல்வராக்கி, தான் எதிர்க் கட்சி தலைவர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதுதான் சித்தராமையாவின் நோக்கம்’ என்று குற்றம் சாட்டியிருந்தார். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, ’நான் 14 மாதங்கள் ஆட்சியில் இருந்தேன். காங்கிரஸ் என்னை ஒரு கிளார்க் போல நடத்தினார்கள். எவ்வளவு நாட்களுக்கு அடிமையாகவே இருப்பது? காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் என் முகத்தில் பேப்பர் கட்டை தூக்கி வீசி அவமானப்படுத்தினார். காங்கிரஸ் என்னை எப்படி நடத்தியது என்று எனக்கு தெரியும். நான் அமைதியாகவே இருக்கிறேன். சித்தராமையா எப்படி அரசாங்கத்தை வழிநடத்தினார் என்பதும் எனக்கு தெரியும். காங்கிரஸ் எம்.எல்.ஏ தொகுதிகளுக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தேன்.

  விவசாயிகளுக்கு 25 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்த நிலையிலும், காங்கிரஸ் கட்சியின் திட்டங்களுக்கு தொடர்ச்சியாக நிதி அளித்தேன். சித்தராமையாவால் நியமிக்கப்பட்ட 19 அரசு உயர் அதிகாரிகள் அதே பொறுப்பில் தொடர்ந்தனர். இருப்பினும், மாண்டியாவிலும், டும்கூருலும் எங்கள் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட்டனர்’ என்று தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: HD Kumaraswamy, Karnataka