மம்தா வழியில் எதிர்கொள்வோம்! வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக கொதித்த குமாரசாமி

மாண்டியா மற்றும் ஹாசன் மாவட்டத்திலுள்ள குமாரசாமிக்கு நெருக்கமான மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்களின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

news18
Updated: March 28, 2019, 8:56 PM IST
மம்தா வழியில் எதிர்கொள்வோம்! வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக கொதித்த குமாரசாமி
குமாரசாமி உள்ளிட்ட அமைச்சர்கள்
news18
Updated: March 28, 2019, 8:56 PM IST
வருமான வரிச் சோதனை நடைபெறுவதைக் கண்டித்து கர்நாடகா முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர் பெங்களூருவிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. இந்தநிலையில், இன்று காலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்நாடகா மாநில வருமான வரித்துறை அதிகாரிகள், மாண்டியா மற்றும் ஹாசன் மாவட்டத்திலுள்ள குமாரசாமிக்கு நெருக்கமான மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்களின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். ஹாசன் மற்றும் மாண்டியா தொகுதிகளில் தேவகவுடாவின் பேரன்கள் இருவர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

எனவே, வருமான வரித்துறையினரின் சோதனை உள்நோக்கம் கொண்டது என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள குமாரசாமி, ‘வருமான வரிச்சோதனையின் மூலம் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மோடி திறந்துவிட்டுள்ளார். மோடியின் பழிவாங்கும் நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு கர்நாடக வருமானத் துறைத் தலைவர் பாலகிருஷ்ணாவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளது. தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகளை சங்கடப்படுத்த ஊழல் அதிகாரிகள் பயன்படுகின்றனர்’ என்று பதிவிட்டுள்ளார்.

பின்னர், முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் ஜி.பரேஸ்வரா, அமைச்சர் சிவகுமார் உள்ளிட்டவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின்போது பேசிய குமாரசாமி, ‘பா.ஜ.க வருமான வரித்துறை சோதனையை நடத்தினால், நாங்கள் மம்தா பானர்ஜியின் வழியைப் பின்பற்றி அதனை எதிர்கொள்வோம்’ என்றார்.

Also see:

First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...