Home /News /national /

ஒரு மொழிக்கு மட்டும் ஏன் தனி முக்கியத்துவம்.. கர்நாடகாவில் இந்தி தின கொண்டாட்டத்திற்கு குமாரசாமி எதிர்ப்பு

ஒரு மொழிக்கு மட்டும் ஏன் தனி முக்கியத்துவம்.. கர்நாடகாவில் இந்தி தின கொண்டாட்டத்திற்கு குமாரசாமி எதிர்ப்பு

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி

ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது அநீதி என இந்தி தினம் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India
    கர்நாடகாவில் இந்தி நாள் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், செப்டம்பர் 14ஆம் தேதி மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் இந்தி தினம் கொண்டாட திட்டங்களை தீட்டியுள்ளது. இதை ஏற்று கர்நாடகா மாநில அரசு செயல்படுத்தினால் அது கன்னடர்களுக்கு இழைக்கும் துரோகமாகும்.

    மாநில மக்களின் வரிப் பணத்தை வைத்து கர்நாடகா அரசு இந்தி தினம் கொண்டாடுவதை ஏற்க முடியாது. ஆயிரக்கணக்கான மொழிகள், 560 சமஸ்தானங்கள், பன்முகத்தன்மை கொண்ட சமூக கலச்சார பண்பாடுகள் ஆகியவை தான் இந்தியாவை சிறந்த ஒன்றியமாக வைத்துள்ளது. அப்படிபட்ட நாட்டில், ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவது அநீதியாகும். மக்களிடம் மொழியை திணிக்க கூடாது. இது கண்டனத்திற்கு உரியது. எனவே, கர்நாடகா பாஜக அரசு இந்தி தினம் கொண்டாடுவதை கைவிட வேண்டும் என்றார்.

    இதையும் படிங்க: கேரளாவில் 18 நாள், உத்தரப் பிரதேசத்தில் வெறும் 2 நாள்.. இது தான் பாஜகவை எதிர்ப்பதா? ராகுலுக்கு மார்க்சிஸ்ட் கேள்வி

    இந்தி மொழி திணிப்பு விவகாரம் சில மாதங்களாகவே மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்தி மொழியை தேசிய மொழியாக ஏற்று அனைத்து மாநிலங்களும் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் சில மாதங்களுக்கு முன்னர் அமித் ஷா பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். கடந்த ஆண்டும், இந்தி தினத்திற்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டத்தை நடத்தினார்கள்.
    Published by:Kannan V
    First published:

    Tags: HD Kumaraswamy, Hindi, Karnataka

    அடுத்த செய்தி