ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாலியல் புகார் கூறிய உன்னா பெண் மீது லாரி மோதிய வழக்கில் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு!

பாலியல் புகார் கூறிய உன்னா பெண் மீது லாரி மோதிய வழக்கில் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு!

குல்தீப் சிங் செங்கார்

குல்தீப் சிங் செங்கார்

பாலியல் புகார் கூறிய பெண்ணும் வழக்கறிஞரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  உத்தரப் பிரதேச மாநிலம் உன்னா எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்த பெண்ணின் மீது லாரி மோதிய வழக்கில் எம்.எல்.ஏ, அவரது சகோதரர் உள்ளிட்ட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

  உத்தரப் பிரதேச மாநிலம் உன்னா பகுதியைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட பெண்(பாலியல் வன்கொடுமை நடைபெற்றபோது அவருக்கு வயது 17. அப்போது அவர் சிறுமி). அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

  அந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் தலைப்புச் செய்தியானது. அதுகுறித்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டு(2017) உன்னோ தொகுதி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடய சகோதரர் உள்ளிட்ட சிலர் என்னைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்’ என்று புகார் அளித்தார்.

  அதனையடுத்து, எம்.எல்.ஏவின் ஆட்கள், புகார் அளித்தப் பெண்ணின் தந்தையை கடுமையாகத் தாக்கினர். அதுதொடர்பாக, காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், காவலிலேயே பெண்ணின் தந்தை உயிரிழந்தார். இந்தகைய சம்பவங்களால் இந்த விவகாரம் நாட்டின் தலைப்புச் செய்தியானது. இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ விசாரணை செய்துவருகிறது.

  இந்த வழக்கை விசாரித்து சி.பி.ஐ, பெண்ணை, எம்.எல்.ஏ அவரது சகோதரர் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

  இந்தநிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் இன்று பாதிக்கப்பட்ட பெண், அவருடயை அம்மா, அவருடைய வழக்கறிஞர், பெண்ணின் உறவினப் பெண்கள் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர்கள் சென்ற காரின் மீது மோதியது. அந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் படுகாயமடைந்தனர்.

  பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவும், உறவினப் பெண் ஒருவரும் உயிரிழந்தனர். பாலியல் புகார் கூறிய பெண்ணும் வழக்கறிஞரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கார் விபத்து வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் அவரது சகோதரர் மனோஜ் சிங் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை, டெல்லி பெண்கள் நல ஆணையர் ஸ்வாடி மாலிவால் நேரில் சென்று சந்திதுள்ளார்.

  இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘வழக்கறிஞரும் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது வழக்கறிஞரும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள், டெல்லியிலுள்ள நல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்று மருத்துவர்கள் விரும்புகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை, யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசின் சார்பாக யாரும் பார்க்க வரவில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

  இந்தச் சம்பவம் குறித்த ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், ‘இந்தியப் பெண்களுக்கு புதிய கல்வி ஒன்று புகப்படுகிறது. பா.ஜ.க எம்.எல்.ஏ உங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு இருந்தால், நீங்கள் அவர்களை நோக்கி கேள்வி எழுப்பக்கூடாது’ என்று பதிவிட்டிருந்தார்.

  இதுகுறித்த பிரியங்கா காந்தி ட்விட்டர் பதிவில், ‘முதல் தகவல் அறிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள உங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரை கட்சியிலிருந்து நீக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அந்தப் பதிவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் குல்திப் சிங் செங்கார் இருக்கும் படத்தையும் பதிவிட்டுள்ளார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: BJP MLA