குல்பூஷன் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் - பிரதமர் மோடி நம்பிக்கை

தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இறுதியில் நீதி கிடைத்துள்ளதாகவும், இந்த மகிழ்ச்சியில் ஜாதவின் குடும்பத்தினருடன் இந்தியர்கள் அனைவரும் பங்கேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: July 18, 2019, 7:53 AM IST
குல்பூஷன் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் - பிரதமர் மோடி நம்பிக்கை
மோடி
Web Desk | news18
Updated: July 18, 2019, 7:53 AM IST
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, குல்பூஷன் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.


Loading...



உண்மையும், நீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும், உண்மைகளை விரிவாக ஆய்வு செய்து தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றத்துக்கு வாழ்த்துக்கள் என்றும், குல்பூஷணுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு வந்ததும் ஜாதவ் வளர்ந்த மும்பை பரேல் பகுதியில் மக்கள் பலூனை பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குல்புஷண் ஜாதவ்


சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது ஜாதவின் குடும்பத்தினருக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஜாதவின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு பேசியதாகவும், அவர்களது உறுதிக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதேபோல, தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இறுதியில் நீதி கிடைத்துள்ளதாகவும், இந்த மகிழ்ச்சியில் ஜாதவின் குடும்பத்தினருடன் இந்தியர்கள் அனைவரும் பங்கேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், பாகிஸ்தான் நினைத்த வழியில் வழக்கை நடத்தலாம் என தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது ஜாதவுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க... சரவணபவன் ராஜகோபாலின் கதை!





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...