Home /News /national /

''என்ன மொழி பேச வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்'' - இந்தி விவகாரத்தில் அமித் ஷாவுக்கு கே.டி.ஆர். கண்டனம்

''என்ன மொழி பேச வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்'' - இந்தி விவகாரத்தில் அமித் ஷாவுக்கு கே.டி.ஆர். கண்டனம்

தெலங்கானா உள்துறை அமைச்சர் கே.டி, ராமாராவ்

தெலங்கானா உள்துறை அமைச்சர் கே.டி, ராமாராவ்

ஆங்கிலத்துக்கான முக்கியத்துவத்தை குறைத்து இந்தியை திணிக்கும்போது இந்திய இளைஞர்கள் உலகளாவிய வாய்ப்புகளை பெறுவதில் தவறி விடுவார்கள்.

என்ன மொழி பேச வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும் என்று இந்தி மொழி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தெலங்கானா உள்துறை அமைச்சர் கே.டி. ராமாராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தெலங்கானா உள்துறை அமைச்சரும், முதல்வர் சந்திர சேகர ராவின் மகனுமான கே.டி. ராமாராவ் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது-

அன்புள்ள அமித் ஷா அவர்களே, வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் நாட்டின் பலம். பல மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா. என்ன மொழி பேச வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்.

இதையும் படிங்க - ஹிஜாப், ஹலால் மட்டும் போதாது.. வளர்ச்சித் திட்டங்கள்தான் முக்கியம் - கர்நாடக முதல்வருக்கு கட்சி மேலிடம் உத்தரவு
நான் முதலில் இந்தியன். தெலுங்கு மொழி பேசுபவன் என்பதில் பெருமை கொள்கிறேன். அடுத்ததாக நான் தெலங்கானாவை சேர்ந்தவன். என்னால் என்னுடைய தாய்மொழி தெலுங்கிலும், ஆங்கிலம், இந்தியிலும் பேசுவேன். கொஞ்சம் உருது மொழியும் தெரியும்.

ஆங்கிலத்துக்கான முக்கியத்துவத்தை குறைத்து இந்தியை திணிக்கும்போது இந்திய இளைஞர்கள் உலகளாவிய வாய்ப்புகளை பெறுவதில் தவறி விடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க - சுழன்று சுழன்று வேலை செய்யும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வேண்டும் - சரத் யாதவ் விருப்பம்
இந்தியாவில் இந்தியர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும்போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். அவரது கருத்து மறைமுகமாக இந்தியை திணிப்பதாக உள்ளதென்று கூறி, பல்வேறு மாநில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் பன்முகத் தன்மை மீது தாக்குதல் நடத்துவதாக கண்டித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மீண்டும் மீண்டும் தவறிழைக்க வேண்டாம் என்றும் இதில் பாஜக வெற்றி பெற முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதேபோன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் அமித் ஷாவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
Published by:Musthak
First published:

Tags: Amit Shah, Hindi

அடுத்த செய்தி