ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரளாவில் பேருந்துகள் மோதியதில் பயங்கர விபத்து -ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 9 பேர் மரணம்

கேரளாவில் பேருந்துகள் மோதியதில் பயங்கர விபத்து -ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 9 பேர் மரணம்

விபத்து

விபத்து

சுற்றுலா சென்ற பேருந்து கேரளா அரசு பேருந்தின் பின்னால் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  பாலக்காடு மாவட்டம் வடக்காஞ்சேரி பகுதியில் அரசு பேருந்தும் சுற்றுலா சென்ற பேருந்தும் மோதிய விபத்தில் மாணவர்கள் உட்பட 9 பேர் மரணம். இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளனர். பாலக்காடு திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தானது நள்ளிரவு 12 மணிக்கு நடந்துள்ளது.

  சுற்றுலா பேருந்தில் 42 பள்ளி மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் பயணம் செய்துள்ளனர். இவர்களில் 12 பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. 24 பேருக்கு லேசான காயம். கேரள அரசுப்பேருந்தில் 49 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

  இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பாலக்காடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பாலக்காடு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

  காரை முந்த முயன்ற போது சுற்றுலா பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசுப்பேருந்தின் பின்பக்கத்தில் மோதியுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Accident, Bus accident, Kerala, School students