• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்... சொந்த ஊர் திரும்ப முடியாமல் பயணிகள் அவதி... கேரள அரசு அவசர ஆலோசனை

அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்... சொந்த ஊர் திரும்ப முடியாமல் பயணிகள் அவதி... கேரள அரசு அவசர ஆலோசனை

மாதிரி படம்

மாதிரி படம்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் கேரள போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  • Share this:
    தீபாவளி பண்டிகையை கொண்டா தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பலர் சொந்த ஊருக்கு சென்றனர். தீபாவளி முடிந்து பலர் திரும்புவதால் பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஊதிய உயர்வு கோரி கேரள அரசுப் பேருந்து ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று நள்ளிரவு முதல் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது.

    தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பலர் பணிக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்துள்ளனர். மருத்துவமனைகள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகளுக்கு தனியார் பேருந்துகள் மூலம் மாற்று ஏற்பாடுகளை போலீசார் செய்து கொடுத்தனர்.

    கேரளாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் உயர்த்துப்பட்டு வந்த நிலையில் 9 ஆண்டுகளாக அரசு பேருந்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வு செய்யப்படவில்லை. இதன் காரணமாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 48 மணி நேரம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கிடையே, கேரள அரசு போக்குவரத்து கழகத்தை அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ் கொண்டு வர அரசு ஆலோசித்து வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் அண்டோனி ராஜூ தெரிவித்துள்ளார்.  தீபாவளிக்காக கேரளா சென்றவர்கள் தமிழகத்திற்கு திரும்ப முடியாமல் கடும் அவதி அடைந்துள்ளதால் அரசு உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: