தமிழகத்திற்கு நாளை கிருஷ்ணா நதிநீர் திறப்பு: ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி நீர் தேக்கத்திற்கு கிருஷ்ணா நதிநீர் நாளை திறக்கப்பட உள்ளதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திற்கு நாளை கிருஷ்ணா நதிநீர் திறப்பு: ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
பூண்டி
  • News18 Tamil
  • Last Updated: September 15, 2020, 2:19 PM IST
  • Share this:
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டி உள்ளது. அதன்படி, கண்டலேறு அணையில் இருந்து பூண்டி நீர் தேக்கத்திற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி முதல் கடந்த ஜூன் 24ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட்டனர்.

இந்நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

மேலும், அண்மையில் திருப்பதியில் நடைபெற்ற தெலுங்கு கங்கை திட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு கூட்டத்திலும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தனர். இதனையேற்று கண்டலேறு அணையில் இருந்து நாளை காலை 10 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க... ஜனவரி 27-ல் சசிகலா ரிலீஸ் ஆக வாய்ப்பு



இந்த நீர் வரும் 19ஆம் தேதி தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கும் அதற்கு மறுநாள் பூண்டி நீர் தேக்கத்திற்கும் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 3,231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கக் கூடிய பூண்டி நீர் தேக்கத்தில் தற்போது வெறும் 67 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது.
First published: September 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading