Home /News /national /

கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்..!

கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்..!

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி

Krishna Janmashtami : நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mathura, India
    கிருஷ்ணர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான இந்த புனித நாளில் விரதம் இருந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம் படைத்து, பாடல்களை பாடி அவரின் அருளை பெறுவர்.

    அதன்படி கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வட மாநிலங்களில் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.கிருஷ்ணர் அவதரித்த இடமாக கருதப்படும் மதுராவில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு பஜனைகள் பாடி கிருஷ்ணரை வழிபட்டனர்.

    அதேபோல் மும்பையில் உள்ள இஸ்கான் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ராதா, ருக்மனியுடன் காட்சி தரும் கண்ணனை ஏராளமானோர் வழிபட்டு வருகின்றனர்.

    Also Read: கிருஷ்ண ஜெயந்திக்கு படையலில் வைக்க வேண்டிய உப்பு சீடை செய்ய ரெசிபி...

    டெல்லி துவாரகாவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நடைபெற்ற மகாபாரத நாடகத்தை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் கண்டு களித்தனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Hindu Temple, India, Krishna Jayanthi

    அடுத்த செய்தி