• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அவர் அகிலேஷ் யாதவ் அல்ல.. அகிலேஷ் அலி ஜின்னா- உ.பி. துணை முதல்வர் கேலி

அவர் அகிலேஷ் யாதவ் அல்ல.. அகிலேஷ் அலி ஜின்னா- உ.பி. துணை முதல்வர் கேலி

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

இந்த மாநிலத்தின் மக்களை நேர்மையுடன் அணுகும் கட்சி பாஜக மட்டும்தான். மாஃபியாக்கள், கூலிப்படைகள் ஏராளமாக இருந்த நிலையில் அவற்றை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியைக் கொண்டுவந்தது பாஜக அரசுதான்.

  • Share this:
    சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்று மாற்றிக் கொள்ளட்டும் என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கேலி செய்துள்ளார்.

    சிறுபான்மையினரை திருப்தி செய்வதற்காகப் பேசி வருகிறார் அகிலேஷ் யாதவ், தன் பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்று மாற்றி வைத்துக் கொள்ளட்டும் என்று கேசவ் பிரசாத் மவுரியா கிண்டல் ச்செய்துள்ளார்.

    உ.பி.தேர்தல் வரவிருப்பதால் அரசியல் கட்சிகளின் காரசாரப் பேச்சுகள் தொடங்கியுள்ளன. அகிலேஷ் யாதவ்தான் அடுத்த முதல்வர் என்று சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஒம் பிரகாஷ் ராஜ்பர் தெரிவித்ததோடு, பாஜகவில் இப்போது 3 லாபிக்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டி, “ஒன்று யோகி ஆதித்யநாத் - ஆர்.எஸ்.எஸ். லாபி. 2. அமித் ஷா-கேஷவ் மவுரியா லாபி, 3வது லாபி பிராமணர்கள். இந்த 3 லாபிகளி ஒன்று யோகியைத் தோற்கடிக்க பணியாற்றி வருகிறது, இன்னொரு லாபி பாஜக வெல்ல வேண்டும் என்று பணியாற்றும், 3வது லாபி ஒரு பிராமணரை முதல்வராக்க வேண்டும் என்று பார்க்கிறது.

    ஆனால் 100% உறுதியாகக் கூறுகிறேன் அகிலேஷ்ஜி முதல்வராவார். பாஜகவை வெளியேற்ற அகிலேஷினால்தான் முடியும் காங்கிரஸ், பகுஜன் கட்சிகளால் முடியாது” என்கிறார் ஓம் பிரகாஷ் ராஜ்பர்.

    இந்நிலையில்தான் உ.பி. துணை முதல்வர் அகிலேஷ் யாதவ்வை விமர்சிக்கும் போது, “சிறுபான்மையினரைத் திருப்திபடுத்தும் அரசியல் செய்வதற்காக ஜின்னாவைப் பற்றிப் பேசுகிறது சமாஜ்வாதி கட்சி. அதனால்தான் அகிலேஷ் யாதவ் தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்று மாற்றிக் கொள்ளட்டும். அவரின் கட்சியின் பெயரையும் ஜின்னாவாடிக் கட்சி எனவும் மாற்றிக் கொள்ளட்டும்.

    ஜின்னா ஒருபோதும் தேர்தலில் வெல்லமாட்டார். இந்த மாநிலத்தின் மக்கள் பாஜகவைத் தேர்ந்தெடுப்பார்கள். முகமது அலி ஜின்னாவோ அல்லது முக்தர் அன்சாரியோ தேர்தலில் வெல்ல உதவமாட்டார்கள். மக்கள் தாமரைச் சின்னத்தைத்தான் மீண்டும் தேர்வு செய்வார்கள்.

    இந்த மாநிலத்தின் மக்களை நேர்மையுடன் அணுகும் கட்சி பாஜக மட்டும்தான். மாஃபியாக்கள், கூலிப்படைகள் ஏராளமாக இருந்த நிலையில் அவற்றை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியைக் கொண்டுவந்தது பாஜக அரசுதான்.

    கடந்த 3 தேர்தலில் தோல்வி அடைந்ததால் எதிர்க்கட்சிகள் அச்சத்தில் உள்ளன. இந்த முறையும் தோற்றுவிடுவோம் என அச்சப்படுகிறார்கள். ஆனால், எங்களுக்குக் கள நிலவரம் என்னவென்று தெரியும். கிளை மட்டத்திலிருந்து பாஜக வலுவாக இருக்கிறது. இது சமாஜ்வாதி கட்சிக்கும் தெரியும். அவர்களிடம்தான் கூலிப்படைகளும், குண்டர்களும், மாஃபியாக்களும் இருக்கிறார்கள்”

    இவ்வாறு கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: