ராஜினாமா கடிதம் அளித்த அமைச்சர்; அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் - பரபரப்பின் உச்சத்தில் பஞ்சாப்!

ராஜினாமா கடிதம் அளித்த அமைச்சர்; அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் - பரபரப்பின் உச்சத்தில் பஞ்சாப்!

பஞ்சாப் அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தவா

பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருக்கிற எதிர்ப்புக் குரல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன..

  • Share this:
அதிருப்தியடைந்த பஞ்சாப் அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தவா தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிடம் அளித்துள்ளார். சிறப்பு புலனாய்வுக் குழுவால் கொட்காபுரா துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையால் அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவினால் அவர் இம்முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

பஞ்சாபில் கடந்த 2017 முதல் முதல்வர் அமரீந்தர் சிங் தலமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2015ம் ஆண்டு கொட்காபுரா துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அண்மையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முன்னாள் பஞ்சாப் காவல்துறை ஐ.ஜி.குன்வர் விஜய் பிரதாப் தலைமையிலான எஸ்.ஐ.டி நடத்திய கொட்காபுரா துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையை ரத்துசெய்த உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து விவாதிக்க முதல்வர் சிறப்பு கூட்டத்தை கூட்டியிருந்தார். கடந்த திங்கட்கிழமை முதல் இந்த கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், செவ்வாயன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதில் கலந்து கொண்ட சிறைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரான சுக்ஜிந்தர் ரந்தவா அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார். அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அக்கூட்டத்திலேயே ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதிய அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தவா, முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிடம் அளித்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரான சுனில் குமார் ஜாக்கரும் ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் அளித்திருக்கிறார்.

இருப்பினும் ராஜினாமா கடிதங்களை ஏற்காத முதல்வர் அமரீந்தர் சிங் அக்கூட்டத்திலேயே ராஜினாமா கடிதங்களை கிழித்து எறிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தவா புறக்கணித்துள்ளார். இதனால் ஆளும் அரசுக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது.
மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்த ரூ.2 லட்சத்தை ஆக்சிஜன் வாங்க நன்கொடையளித்த விவசாயி!

இதுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, எம்.எல்.ஏ பர்கத் சிங் ஆகியோரும் அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருக்கிற எதிர்ப்புக் குரல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன..
Published by:Arun
First published: