பாரத ஸ்டேட் வங்கியை முந்தியது  கோடெக் மஹிந்திரா வங்கி

news18
Updated: April 16, 2018, 4:19 PM IST
பாரத ஸ்டேட் வங்கியை முந்தியது  கோடெக் மஹிந்திரா வங்கி
கோடெக் மஹிந்திரா வங்கி.
news18
Updated: April 16, 2018, 4:19 PM IST
அதிக சந்தை மதிப்பு கொண்ட வங்கிகள் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கியை முந்தியது கேடெக் மஹிந்திரா வங்கி. எஸ்பிஐ வங்கியை பின்னுக்குத் தள்ளி  கோடெக் மஹிந்திரா வங்கி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் கோடெக் மஹிந்திரா வங்கியின் சந்தை மதிப்பு ரூ.2,22,560 கோடியாக உயர்ந்தது. இந்த வங்கியின் பங்கு இன்றைய வர்த்தகத்தில் 1.7 சதவீதம் உயர்த்து வர்த்தகமாகியது. இதன்மூலம் அதிக  சந்தை மதிப்பு கொண்ட வங்கிகள் பட்டியலில் கோடெக் மஹிந்திரா வங்கி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் சந்தை மதிப்பு இன்றைய நிலவரப்படி ரூ.2,22,043 கோடியாக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு மதிப்பு 1 சதவீதம் மட்டுமே உயர்ந்தது.

அதிக சந்தை மதிப்பு கொண்ட வங்கிகள் பட்டியலில் ஹெச்டிஎப்சி வங்கி முதலிடத்தில் உள்ளது. இந்த வங்கியின் சந்தை மதிப்பு ரூ. 5,04,000 கோடியாக உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு விவகாரம் வெளியான பிறகு எஸ்பிஐ வங்கி பங்கு 10 சதவீதம் வரை சரிவைக் கண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பொதுத்துறை வங்கிகள் குறியீடும் 18.4 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்