• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவின் அனைத்து முக்கிய நுழைவுத் தேர்வுகளிலும் பாஸ்!- அசத்திய பள்ளி மாணவி

இந்தியாவின் அனைத்து முக்கிய நுழைவுத் தேர்வுகளிலும் பாஸ்!- அசத்திய பள்ளி மாணவி

மாணவி ஸ்டூதி

மாணவி ஸ்டூதி

இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்காவின் மஸாச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் நுழைவுத் தேர்வில் சிறந்த ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பள்ளிக் கல்வியின் இறுதி ஆண்டை நிறைவு செய்துள்ள மாணவி ஒருவர் இந்தியாவின் கடினமான முக்கியமான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் எழுதி அனைத்திலும் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த ஸ்டூதி கந்தவாலா என்ற மாணவி பள்ளிப் படிப்பை நிறைவு செய்து கல்லூரிப் படிப்பில் இணைவதற்காகப் பல நுழைவுத் தேர்வுகளிலும் கலந்துகொண்டுள்ளார். நீட், எய்ம்ஸ் மருத்துவத் தேர்வு, ஜேஇஇ தேர்வு என இந்தியாவின் அனைத்து கடினமானத் தேர்வுகளிலும் சிறந்த மதிப்பெண் உடன் ஸ்டூதி தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 71-வது ரேங்க், எய்ம்ஸ் மருத்துவத் தேர்வில் அகில இந்திய அளவில் 10-வது ரேங்க் என அசத்தியுள்ளார் ஸ்டூதி. இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்காவின் மஸாச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் நுழைவுத் தேர்வில் சிறந்த ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும் அசத்திய மாணவி ஸ்டூதி கடைசியில் எந்தப் படிப்பில் எந்தக் கல்லூரியில் சேருவது என குழம்பியுள்ளார். பள்ளி அசிரியர்கள் உதவியுடன் கல்வியாளர்கள் ஆலோசனைப் பெற்று, தற்போது அமெரிக்க தொழில்நுட்பக் கல்லூரியில் 90% ஊக்கத்தொகை உடன் பயோ இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார் ஸ்டூதி.

மேலும் பார்க்க: மூன்று மாதம் பகல்... மூன்று மாதம் இரவு!- அதிசயிக்க வைக்கும் விநோதத் தீவு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: