மகாராஷ்டிர ஆளுநருக்கு அரசு விமானத்தை பயன்படுத்த அனுமதி மறுப்பு! - முதல்வர் உத்தவ் தாக்கரே - ஆளுநர் கோஷ்யாரிக்கு இடையே முற்றும் மோதல்?

பகத் சிங் கோஷ்யாரி

மும்பை விமான நிலையத்திற்கு வந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தார். பின்னர் விமானத்தில் ஏறி 15 நிமிடங்கள் காத்திருப்புக்கு பின்னரும் விமானம் புறப்படவில்லை. 15 நிமிட காத்திருப்புக்கு பின்னர் ஆளுநரிடம் வந்த விமானி தனக்கு விமானத்தை இயக்குவதற்கான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

  • Share this:
மகாராஷ்டிர ஆளுநர் கோஷ்யாரி மற்றும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு இடையிலான பனிப்போர் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டெல்லி, பாண்டிச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையிலான அதிகார மோதல்கள் ஏற்கனவே வெட்ட வெளிச்சமாகியுள்ளன. அரசியல் ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினாலும் இது போன்ற மோதல்கள் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவையாகவே பார்க்கப்படுகின்றன. அது போன்ற முதல்வர் - ஆளுநர் மோதலில் மகாராஷ்டிர மாநிலமும் தற்போது இணைந்துள்ளது.

கோவா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் ஆளுநராக இருந்து வருபவர் பகத் சிங் கோஷ்யாரி. இவர் மும்பையில் இருந்து டெஹ்ராடூனுக்கு அரசு விமானத்தில் பயணமாவதற்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தார். பின்னர் விமானத்தில் ஏறி 15 நிமிடங்கள் காத்திருப்புக்கு பின்னரும் விமானம் புறப்படவில்லை. 15 நிமிட காத்திருப்புக்கு பின்னர் ஆளுநரிடம் வந்த விமானி தனக்கு விமானத்தை இயக்குவதற்கான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வேறு வழியின்றி பயணிகள் விமானம் ஒன்றில் உத்தரகாண்டிற்கு ஆளுநர் கோஷ்யாரி புறப்பட்டு சென்றார்.

இத்தனைக்கும் ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே ஆளுநரின் பயணத்திட்டம் குறித்து மாநில அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டுவிட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இது வழக்கத்திற்கு மாறானது என்றும் கூறினர்.

இது தொடர்பாக துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில் ஆளுநருக்கு விமானம் அளிக்கப்பட்டதா இல்லையா என தான் அறிந்திருக்கவில்லை எனவும் அமைச்சகத்திற்கு சென்று விவரங்கள் கேட்டு பதிலளிப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபரில் முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கும், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. மாநிலத்தில் வழிபாட்டுத்தலங்களை திறக்க முதல்வர் அனுமதி அளிக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி ஆளுநர் கோஷ்யாரி எழுதிய கடிதத்தில் மதச்சார்பற்றவராக மாறிய இந்துத்துவாவின் வாக்காளர் என அதில் விமர்சித்திருந்தார்.
Published by:Arun
First published: