Home /News /national /

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து

கொல்கத்தா மருத்துவமனையில் தீ விபத்து

கொல்கத்தா மருத்துவமனையில் தீ விபத்து

  • News18
  • Last Updated :
    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

    கொல்கத்தாவில் இருக்கும் மிகப் பழமையான மருத்துவமனைகளில் கொல்கத்தா தேசிய மருத்துவ கல்லூரியும் ஒன்று. அது 1948 ஆம் ஆண்டு நிறுவபட்ட மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது.  உடனடியாக தீயணைப்பு துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 10 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான போலீசாரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

    தீயை அணைக்கப் போராடும் தீயணைப்ப் வீரர்கள்.


    மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 250 பேர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். நோயாளிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. எனினும் அருகில் உள்ள பகுதிக்கு தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்து வருகினறனர்.

    இந்நிலையில் இந்த தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், இது விபத்தா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட செயலா என்று ரீதியிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Saroja
    First published:

    Tags: Kolkata, Kolkata Medical College Fire accident, Medical College, Today Fire Accident

    அடுத்த செய்தி