• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஊரடங்கு தடையில்லை.. சைக்கிளில் 120 கி.மீ பயணித்து சர்பூரியா இனிப்புகளை விற்கும் கொல்கத்தா இளைஞர்..

ஊரடங்கு தடையில்லை.. சைக்கிளில் 120 கி.மீ பயணித்து சர்பூரியா இனிப்புகளை விற்கும் கொல்கத்தா இளைஞர்..

மாதிரி படம்

மாதிரி படம்

இனிப்புகள் விற்பனை செய்வதன் மூலம் குடும்ப வருமானத்திற்கு இம்ரான் தன்னால் முடிந்த அளவிற்கு பங்களிப்பு செய்கிறார். இம்ரான் தனது வியாபாரத்தை நேசிப்பதால் தான் கோவிட் -19 ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டவுடன் வணிகத்தை தொடர முடிவு செய்துள்ளார். 

  • News18
  • Last Updated :
  • Share this:
கடின உழைப்புதான் வெற்றிக்கு மிக முக்கியமான திறவுகோல். கடின உழைப்பு இல்லாமல் சாதனைகள் சாத்தியமற்றது. ஒரே இடத்தில் உட்கார்ந்து ஒரு சிறந்த வாய்ப்புக்காக காத்திருந்தால் ஒருபோதும் எதையும் பெற முடியாது. கடினமாக உழைக்கும் நபர் வாழ்க்கையில் வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் பெற முடியும். எந்தவொரு கடின உழைப்பும் செய்யாமல் வாழ்க்கையில் எதையும் அடைய முடியாது. மேற்சொன்ன வரிகளுக்கு ஏற்றார் போல் ஒரு உண்மை கதை  கொல்கத்தாவில் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

கொல்கத்தாவின் நாடியா மாவட்டத்தில் இருந்து இம்ரான் ஷேக் என்ற 19 வயது வாலிபர் தனது சைக்கிளில் தினமும் 120 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து  இனிப்புகளை விற்று வருகிறார். கோவிட் -19 நெருக்கடியால் ஏற்பட்ட ஊரடங்கிற்கு பின்னர் உள்ளூர் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் அவர் இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது என்று Mumbai Mirror செய்தி வெளியிட்டுள்ளது. நகரத்தில் இனிப்புகளை விற்க இம்ரான் தனது சைக்கிளில் தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் பயணம் செய்கிறார். 

நாடியா மாவட்டம் இனிப்புகளுக்கு பேர் போனது, குறிப்பாக சர்பூரியா இனிப்பிற்கு அதிக ரசிகர்கள் உண்டு. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தான் வீட்டில் உட்கார விரும்பவில்லை என்று கூறிய அந்த வாலிபர், அன்லாக் 1.0 முடிந்த பின்னர் தனது தொழிலை மீண்டும் தொடங்கியதாக கூறினார், ரயில் போக்குவரத்து இல்லாததால் தனது வியாபாரத்திற்கு சைக்கிளை பயன்படுத்த முடிவு செய்தார். 

சர்பூரியா இனிப்புகள்


உள்ளூர் இனிப்பு கடை உரிமையாளர்களுடன் இந்த வாலிபனுக்கு ஒரு வியாபார டீல் உள்ளது. அவரது இனிப்புகளின் விலை ரூ. 5 தான், இது சந்தை விலையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. இனிப்புகள் குப்பிகளுக்குள்/பெட்டிகளுக்குள் அடைத்து அதிகாலை 3 மணிக்கே வேலையை தொடங்குகிறார் இம்ரான். கொல்கத்தா நகரத்தை தவிர, அவர் கடந்து செல்லும் கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் இனிப்புகளை விற்கிறார். அவர் இறுதியாக காலை 7 மணிக்கு கொல்கத்தாவை அடைந்து தனது இனிப்புகளை அங்கே விற்பனை செய்கிறார். 

இம்ரான். நன்றி: Mumbai Mirror


தற்போதைய வியாபாரம் குறித்து பேசிய இம்ரான், முன்னர் 300 இனிப்புகளை விற்பனை செய்வதாகவும், இப்போதுள்ள சூழலில் சுமார் 700 இனிப்புகளை ஒரே நாளில் விற்பதால் தனது வணிகம் வளர்ந்துள்ளதாக கூறுகிறார். வாடிக்கையாளர்கள் பல வகையான இனிப்புகளை கேட்பதால் தான் தனது வணிகம் செழித்தோங்கியது என்றும் ரஸ்குல்லாஸ், குலாப் ஜமுன் மற்றும் லாங்சா போன்றவை அதில் முக்கிய இனிப்பு வகைகள் என்றும், அதுமட்டுமன்றி  உலர்ந்த இனிப்புகள் நிறைந்த ஒரு பையையும் தான் எடுத்துச் செல்வதாக இம்ரான் கூறுகிறார்.

Also read.. எஸ்பிஐ வங்கியின் மாணவர்களுக்கான கடன் திட்டம்: தகுதி, கடன் தொகை குறித்த விவரங்கள்..இவரது பெற்றோர் வயலில் வேலை செய்கிறார்கள், இனிப்புகள் விற்பனை செய்வதன் மூலம் குடும்ப வருமானத்திற்கு இம்ரான் தன்னால் முடிந்த அளவிற்கு பங்களிப்பு செய்கிறார். இம்ரான் தனது வியாபாரத்தை நேசிப்பதால் தான் கோவிட் -19 ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டவுடன் வணிகத்தை தொடர முடிவு செய்துள்ளார். 

நாட்டில் கோவிட் -19 பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில், மார்ச் 25, 2020 முதல் ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவைகள் தடைபட்டன, வேலைக்காக பயணித்த பலர் தனியார் வாகனங்களை பயன்படுத்த வேண்டியிருந்தது. இதனால் பலரிடம் இருந்த சொற்ப பணமும் கரைந்தது. ஆனால் இந்த சூழலில் இம்ரானின் எண்ணம் அவரை ஓய்வில் நிறுத்தாமல் தொடர்ந்து ஓடச் செய்தது. வாய்ப்புகள் வரும்போதே அதை பயன்படுத்தவேண்டும் இல்லையென்றால் தோல்விகள் நிச்சயம் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: