சிபிஐ விசாரணையில் ஆஜரானார் கொல்கத்தா காவல் ஆணையர்!

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சிபிஐ விசாரணையில் ஆஜரானார் கொல்கத்தா காவல் ஆணையர்!
காவல் ஆணையர் ராஜீவ் குமார்
  • News18
  • Last Updated: February 9, 2019, 12:30 PM IST
  • Share this:
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆஜராகியுள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தாவில் உள்ள ராஜீவ் குமார் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரிய சிபிஐ மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேகாலாயாவின் ஷில்லாங் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.


இதன்படி, ராஜீவ்குமாரை இன்று விசாரணைக்கு வருமாறு சிபிஐ சம்மன் அனுப்பியதை அடுத்து நேற்று ஷில்லாங் சென்ற அவர், இன்று காலை 11 மணியளவில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுடன் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். ராஜீவ் குமாரிடம் 5 பேர் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதலில் சிபிஐ அலுவலகத்தில் விசாரிக்கும் அதிகாரிகள், அடுத்தகட்டாக வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

Also see...
First published: February 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்