'ஐ லவ் யூ மா’ - அம்மாவுக்காக இறுதிநிமிடத்தில் பாடல் பாடிய மகனின் வலிமிகுந்த பதிவு

மாதிரிப்படம்

என்னுடைய ஷிப்ட் முடிவடையும் நேரம். உயிர்பிழைக்க வாய்ப்பில்லாத ஒரு நோயாளியின் உறவினருக்கு நான் வீடியோ கால் செய்தேன்.

 • Share this:
  கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தனது இறுதிநிமிடங்களை எண்ணிக்கொண்டிருந்த தாய்-க்கு அவரது மகன் பாடிய பாடலை மருத்துவர் ஒருவர் கடந்த வாரம் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். கொல்கத்தாவை சேர்ந்த ஷோஹம் சட்டர்ஜி மரணத்தின் வாயிலில் இருந்த தனது அம்மாவுக்காக பாடினார். அந்த உருக்கமான நிமிடங்களை மருத்துவர் தீப்ஷிகா கோஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். “என்னுடைய ஷிப்ட் முடிவடையும் நேரம். உயிர்பிழைக்க வாய்ப்பில்லாத ஒரு நோயாளியின் உறவினருக்கு நான் வீடியோ கால் செய்தேன். எங்கள் மருத்துவமனையில் நோயாளிகள் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். இது வழக்கமான ஒன்றுதான். அந்த நோயாளியின் மகன் என்னிடம் சில நிமிடங்களை கேட்டார். இறக்கப்போகும் தனது அம்மாவுக்காக ஒரு பாடலை பாடினார்.

  அவர் 'தேரா முஜ்சே ஹை பெஹலா கா நாட்டா கோய்' எனும் பாடலை பாடினார். அவரை பார்த்த படி போனை கையில் பிடித்திருந்தேன். அவர் தன்னுடைய தாயை பார்த்து பாடிக்கொண்டிருந்தார். அந்த அறைக்குள் செவிலியர்கள் வந்தனர் அவர்களும் அமைதியாக நின்றுக்கொண்டார். பாதியில் அவர் உடைந்துவிட்டார். இருப்பினும் அந்தப்பாடலை இறுதிவரை பாடி முடித்தார். அந்த தாயின் உடல்நலன் குறித்து விசாரித்துவிட்டு எனக்கு நன்றிக்கூறி போனை துண்டித்துவிட்டார்.

  நானும் செவிலியர்களும் அங்கேயே நின்றிருந்தோம். நாங்கள் எங்கள் தலையை அசைத்தோம் எங்கள் கண்களில் ஈரம் இருந்தது. செவிலியர்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேறி நோயாளிகளை கவனிக்க அல்லது வெண்டிலேட்டர், டயாலிஸிஸ் யூனிட்களில் இருந்து வந்த அலாரம் காரணமாக அங்கிருந்து சென்றனர். இந்தப்பாட்டு எங்களை மாற்றிவிட்டது. குறைந்தபட்சம் என்னை மாற்றிவிட்டது. இந்தப்பாடல் எப்பொழுதும் அவர்களுடையதாகவே இருக்கும்" என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

      
  View this post on Instagram

   

  A post shared by Soham Chatterjee (@sohamsings)


  சோஹம் சட்டர்ஜி பாடல் பாடிய முடித்த சில மணி நேரங்களில் அவருடைய தாய் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் சோஹம் சட்டர்ஜி அம்மாவுக்காக பாடிய பாடலை மீண்டும் உருக்கமாக பாடியுள்ளார். அதில், “ இசை தாயிடம் இருந்து என்னை கவர்ந்த ஒன்று. ஒருவருக்கொருவர் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்த இது சிறந்த வழியாகும். இந்தப்பாடல் எங்களுடையது. ஐ லவ் யூ மா.. நீ இல்லாம இருக்கிறது கஷ்டமா இருக்கு” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: