• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சேலை கட்டி, நெற்றியில் பொட்டு வைத்து வீதியில் மிடுக்காக நடை போட்ட ஆண் - இப்ப இது தான் ட்ரெண்ட்

சேலை கட்டி, நெற்றியில் பொட்டு வைத்து வீதியில் மிடுக்காக நடை போட்ட ஆண் - இப்ப இது தான் ட்ரெண்ட்

Pushpak sen

Pushpak sen

புஷ்பக் சென், தற்போது உலகின் ஃபேஷன் தலைநகரான மிலன் நகர வீதிகளில் ஒய்யாரமாக போட்டோஷூட் நடத்தி மீண்டும் ஒரு முறை ஊடக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்.

  • Share this:
21ம் நூற்றாண்டு எல்லாவற்றையுமே தலைகீழாக திருப்பிப் போட்டுவிட்டது. ஆடைகள் மூலம் ஆணா? பெண்ணா? என அடையாளம் கண்ட நாட்கள் மலையேறிவிட்டது. பெண்களுக்கு மட்டுமே என அடையாளப்படுத்தப்பட்ட ஆடைகளை தற்போது ஆண்கள் மிகவும் சவுகரியமாக அணியத் தொடங்கியுள்ளனர். பெண்களுக்கான ஆடைகள் என அடையாளப்படுத்தப்படும் ஆடைகளை ஏற்கனவே அணிந்து பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் கபூர், இங்கிலாந்து நாட்டின் பிரபல பாடகர் ஹாரி ஸ்டைல்ஸ், தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் பேண்ட் பிடிஎஸ் போன்றோர்கள் புதிய ட்ரெண்டை தொடங்கி வைத்திருக்கின்றனர்.

ஆனால், பார்வையாளர்களின் கவனத்திற்கே வராத சாமானியர்களும் இந்த ட்ரெண்டை ஏற்கனவே தொடங்கி, சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்று வருவதை அறிந்து கொள்வது அவசியம்.

மேற்குவங்க மாநில தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்த புஷ்பக் சென் அந்த வகையைச் சேர்ந்த ஒரு நபர் தான். இவர் ஏற்கனவே சேலை அணிந்து, நெற்றியில் பொட்டு வைத்து நடத்திய போட்டோஷூட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வைரலாக மாறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Also read: மது, குட்கா போல போதை பொருட்களை வரி செலுத்தி மக்கள் பயன்படுத்த அனுமதி தேவை – காங்கிரஸ் எம்.பி யோசனை

இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் பேஷன் மார்க்கெட்டிங் மற்றும் தொலைத்தொடர்புத் துறை பிரிவில் பயின்று வரும் மாணவரான புஷ்பக் சென், தற்போது உலகின் ஃபேஷன் தலைநகரான மிலன் நகர வீதிகளில் ஒய்யாரமாக போட்டோஷூட் நடத்தி மீண்டும் ஒரு முறை ஊடக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்.கருப்பு சேலை, அதன் மேல் கோட், நெற்றியில் பெரிய சிவப்பு பொட்டு வைத்து, கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு மிகவும் உறுதியான பாவனையில் புஷ்பக் சென் நடைபோடும் போட்டோக்களை, அவர் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

Also read:  ஷாருக் மகனை கைது செய்த சமீர் வான்கடே இந்து மதத்தைச் சேர்ந்தவரல்ல – அம்பலப்படுத்திய முதல் மனைவியின் தந்தை

புஷ்பக் சென்னின் பேஸ்புக் பதிவில், “புடவையில் ஆணாக இருப்பது என்னை எங்கும் அழைத்துச் செல்லாது என்று சொன்னார்கள். உலகின் முக்கிய பேஷன் தலைநகரங்களில் ஒன்றின் தெருக்களில் அதில் நடப்பது யார் என்று யூகிக்கிறீர்களா?” என அவர் தலைப்பிட்டு போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

புஷ்பக் சென்னின் இந்த பேஸ்புக் போஸ்ட், பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அவரை பாராட்டி, வாழ்த்தி பதிவிட்டு வருகிறார்கள். சிலர் அவரின் நேர்த்தியை பாராட்டியுள்ளனர்.

நீங்கள் புஷ்பக் சென்னின் இந்த போஸ்ட் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: