’தாய்ப்பால் கொடுப்பது வீட்டுவேலையா?’ பெண்ணை அவமதித்த கொல்கத்தா மால் பகிரங்க மன்னிப்பு!

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்குவது என்பது வீட்டு வேலை என பெண் ஒருவரை அவமதித்ததற்காக கொல்கத்தா ‘சவுத் சிட்டி மால்’ நிர்வாகம் அப்பெண்ணிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.

Web Desk | news18
Updated: November 30, 2018, 4:05 PM IST
’தாய்ப்பால் கொடுப்பது வீட்டுவேலையா?’ பெண்ணை அவமதித்த கொல்கத்தா மால் பகிரங்க மன்னிப்பு!
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்குவது என்பது வீட்டு வேலை என பெண் ஒருவரை அவமதித்ததற்காக கொல்கத்தா ‘சவுத் சிட்டி மால்’ நிர்வாகம் அப்பெண்ணிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.
Web Desk | news18
Updated: November 30, 2018, 4:05 PM IST
கொல்கத்தா மால் ஒன்றில் பணியாற்றும் நிர்வாகி ஒருவர் ‘தாய்ப்பால் வழங்குவது எல்லாம் வீட்டு வேலை’ என பெண் ஒருவரை அவமதித்ததற்கு  கண்டனங்கள் எழவே, மால் நிர்வாகம் அப்பெண்ணிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ‘சவுத் சிட்டி மால்’ வளாகத்தில் தாய்ப்பால் கொடுப்பதற்காக தனி அறையும் குழந்தைகளுக்கான தனிக் கழிப்பறையும் நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என பெண் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த மால் நிர்வாகி ஒருவர், “தாய்ப்பால் வழங்குவதற்கு எல்லாம் அறை இல்லை என்பதெல்லாம் ஒரு குறையா? இது ஷாப்பிங் மால். இங்கு ஷாப்பிங் செய்வதற்கு மட்டுமே இடமுண்டு. அதனால் உங்களது வீட்டு வேலைகளை எல்லாம் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்காக எல்லாம் மற்றவர்களின் தனியுரிமையை பாதிக்கச் செய்யும் வகையில் நாங்கள் செயல்பட முடியாது” என்றுள்ளார்.

A prominent shopping mall,South City, Kolkata is asking mothers to use washrooms to feed their babies. When a mother asked for a proper feeding zone , this is the response they have given. When will we stop shaming women?! @MinistryWCD @Manekagandhibjp @smritiirani pic.twitter.com/1Wmo2sbZoU


— Trisha Ghosh (@trisha_hope) November 28, 2018



இப்பதிலால் கோபமடைந்த அப்பெண் சமூக வலைதளங்களில் சவுத் சிட்டி மால் நிர்வாகி அளித்த பதிலை பதிவேற்ற, மால் நிர்வாகத்துக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்தது. இதையடுத்து, மால் நிர்வாகம் அப்பெண்ணிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், மால் நிர்வாக ஏஜெண்ட் ஒருவர்தான் விதிமுறை அறியாமல் தவறாகப் பேசிவிட்டதாகவும் குழந்தைகளுக்கு மற்றும் தாய்மார்களுக்கு என தனி அறைகள் ஒதுக்கப்படும் என்றும் சவுத் சிட்டி மால் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Loading...


இதையும் பாருங்க:
ஸ்டெதெஸ்கோப் பிடித்த கையில் தோசை கரண்டி: மாணவிக்கு நேர்ந்த அவலம்

First published: November 30, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

But the job is not done yet!
vote for the deserving condidate
this year

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626