பிறந்த குழந்தைக்கு தந்தை என உரிமை கொண்டாடிய மூன்று ஆண்கள்! விழி பிதுங்கிய போலீசார்

news18
Updated: July 26, 2019, 12:20 PM IST
பிறந்த குழந்தைக்கு தந்தை என உரிமை கொண்டாடிய மூன்று ஆண்கள்! விழி பிதுங்கிய போலீசார்
news18
Updated: July 26, 2019, 12:20 PM IST
மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு 3 ஆண்கள், தந்தை என்று உரிமை கொண்டாடிய சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது.

மேற்கு வங்காளம் மாநிலத்தின் தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21 வயதான கர்ப்பிணிக்கு கடந்த ஞாயிறு அன்று பெண் குழந்த பிறந்துள்ளது.

பிரசவமான பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டுவந்த நபர், தன்னை குழந்தைக்குத் தந்தை என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்ததை அறிந்த மற்றொரு நபர், மருத்துவமனைக்கு வந்து குழந்தையைப் பெற்ற இளம்பெண் தனது மனைவி என்றும் குழந்தை தனக்குப் பிறந்தது என்றும் உரிமை கொண்டாடினார்.

இப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் மாட்டிய மருத்துவமனை நிர்வாகம், போலீசாரை அனுகியது.

இரண்டாவதாக வந்து உரிமை கொண்டாடிய நபர், அந்தப் பெண்ணுடன் தான் நெருங்கி பழகியதற்கான பல்வேறு புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்களைக் காட்டினார். அவற்றை பரிசோதித்த போலீசார், அவரே பெண்ணின் கணவர் என்று முடிவு செய்தனர்.

Loading...

இப்படி இருக்கையில், திடீரென திங்கட் கிழமை மாலை மூன்றாவதாக வந்த இளைஞர், குழந்தைக்கு நானே தந்தை என்று உரிமை கொண்டாடினார்.

இதனால் மீண்டும் குழப்பம் நிலவியது. குழந்தைக்கு உண்மையான தந்தை யார்? என்பதை அந்தப் பெண் சொன்னால்தான் தெரியும் என்று முடிவு செய்த போலீசார், அந்தப் பெண்ணிடமே விசாரிக்கத் தொடங்கினர்.

இரண்டாவதாக வந்த வாலிபர்தான் தனது கணவர் என்றும் அவரே குழந்தைக்குத் தந்தை என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

இதனை அடுத்து மற்ற இருவரையும் போலீசார் அங்கிருந்து விரட்டி அடித்தனர். இதனை அடுத்து, உண்மையான பின்னணி தெரிய வந்தது.

குழந்தைக்கு உரிமை கொண்டாடிய இரண்டாவது நபரும் அந்தப் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். காதல் அடுத்த கட்டத்துக்குச் சென்று அந்தப் பெண் கர்ப்பமானதும் அவரைத் திருமணம் செய்துகொள்ள அந்த நபர் தயங்கியுள்ளார்.

இதனால், ஆவேசமடைந்த அந்தப் பெண் காதலன் மீது போலீசில் புகாரளிக்க, அவர் சிறைக்குச் சென்றுவிட்டார்.

இதற்கிடையே, அந்தப் பெண் வேறு நபர்களுடன் நட்பாக பழகி வந்த நிலையில், அவரது பிரசவ காலமும் நெருங்கி குழந்தையும் பிறந்துள்ளது. இதற்குப் பின்னரே, மேற்கண்ட குழப்பங்கள் நடந்துள்ளது.

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...