கொல்கத்தாவில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு

கொல்கத்தா தீ விபத்து

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

 • Share this:
  மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் பல அடுக்கு கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தின் 13-வது மாடியில் நேற்று மாலை 7 மணி அளவில் திடீரென நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றிய தகவலறிந்து, 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றன. அவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமுடன் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

  பலர் காயமடைந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் முதல்வர் மம்தா பானர்ஜி உடனடியாக விபத்து ஏற்பட்ட இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். இந்த விபத்து குறித்து தெரிவித்த அவர், ‘தீ விபத்து ஏற்பட்டது வருந்தத்தக்கது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: