இந்திய பிரதமர் மோடியின் 72 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 8 சிவிங்கிப்புலிகளை ஆப்பிரிக்கா இந்தியாவுக்கு தனி விமானம் மூலம் அனுப்பி வைத்தது. இந்த சிவிங்கிப்புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்கா பகுதியில் திறந்து விடப்பட்டது.
பொதுவாக நாம் இந்த சிறுத்தைக்கும் சிவிங்கிப்புலிக்கும் குழப்பிக் கொள்வோம். இரண்டுமே பெரிய பூனை வகையை சேர்ந்தது என்பதால் ஏறத்தாழ ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருக்கும். ஆனால் இரண்டும் ஒன்றல்ல. அவற்றின் வித்தியாசங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
கண்ணீர் கொடு :
சிவிங்கிப்புலியின் முகத்தில் கருப்பு நிறத்தில் ஒரு "கண்ணீர்" கோடு போல இருக்கும். இதன் மூலம் முதல் பார்வையிலேயே சிவிங்கிப்புலியை அடையாளம் காண முடியும். இந்தக் கோடு கண்ணின் உட்புறத்திலிருந்து சிவிங்கிப்புலியின் வாய் வரை செல்லும். சிறுத்தைகளுக்கு அப்படி இருக்காது கண்ணை சுற்றி மட்டும் அடர்த்தியான கருமை நிறம் இருக்கும்.
முக அமைப்பு :
சிவிங்கிப்புலியின் முகம் சிறுத்து, வட்டமாக இருக்கும். ஆனால் சிறுத்தைகளின் முகம் படர்ந்து பரவலாக காணப்படும். பார்ப்பதற்கே கொஞ்சம் பெரிய உருவமாக தெரியும்
வேட்டையாடும் திறன் :
சிவிங்கிப்புலிகள் பகலில் வேட்டையாடும். சிறுத்தைகள் பொதுவாக இரவில் வேட்டையாடும். சிறுத்தையின் கண்களில் அதிக எண்ணிக்கையிலான ஒளி-உணர்திறன் செல்களைக் கொண்டுள்ளன. அவை குறைந்த நிறத்தைக் கண்டறிந்தாலும், இருட்டில் அசைவு மற்றும் வடிவத்தை எளிதாகக் கண்டறிந்து, வேட்டையாடும் தன்மையினை அளிக்கின்றன. சிறுத்தையின் கண்களின் பெரிய கண்மணி ஏராளமான ஒளியை உள்ளே நுழைய அனுமதிப்பதால் இரவில் அவை இரையை எளிதாக வேட்டையாடுகிறது.
தோல் :
இரண்டும் ஏறக்குறைய மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். ஒப்பீட்டளவில் சிறுத்தையின் நிறம் கொஞ்சம் அடர்த்தியாக தெரியும்.
இந்த இரண்டு விலங்குகளுக்கும் இடையிலான பொதுவான மற்றொரு வேறுபாடு அவற்றின் கோட்டின் வடிவங்கள். அவை இரண்டிலும் புள்ளிகள் இருப்பது போல் தோன்றலாம், ஆனால் உண்மையில், சிறுத்தைக்கு ரோஜா போன்ற அடையாளங்கள் உள்ளன. சிவிங்கிப்புலிகள் திடமான வட்டமான அல்லது நீள்வட்ட புள்ளி வடிவத்தைக் கொண்டுள்ளன.
வேகம்:
சிவிங்கிப்புலி மிக வேகமான நில விலங்குகள். அவை மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும். அதிக வேகத்தில் இரையைத் துரத்தும்போது, சிறுத்தைகள் தன் நீண்ட வாலை பயன்படுத்தி தன்னை சமநிலைப்படுத்தி கொள்ளும்.இதனால் வேட்டையாடும்போது மிக விரைவாக திசையை மாற்றும்.
சிறுத்தைகள், மணிக்கு 58 கிமீ வேகத்தை மட்டுமே அடைகின்றன. ஆனால் அவை உள்ளிழுக்கும் நகங்கள் கொண்ட பாதங்களைக் கொண்டுள்ளன. இதனால் சிறுத்தைகள் விரைவாக மரத்தில் ஏறி விடும். சிவிங்கிப்புலிகளுக்கு நகங்களை உள்ளிருக்கும் தன்மை கிடையாது. அதனால், அவை மரம் ஏறாது. சிவிங்கிப்புலிகளை விட சிறுத்தை வேகமாக நீந்தும்.
எடை :
சிவிங்கிப்புலிகள் வேகமாக ஓடுவதற்கு ஏற்ப மெல்லிய உடல் , நீண்ட கால்களைக் கொண்டிருக்கும். சிறுத்தைகளை பெரிய விலங்குகளை வேட்டையாடி மரத்திற்கு மேலே இழுத்து செல்லும் அளவிற்கு பருமனாக சிறிய கால்களோடு இருக்கும். சராசரியாக சிவிங்கிப்புலிகள் 21-60 கிலோ எடை இருக்கும். சிறுத்தைகள் 34-64 கிலோ வரை இருக்கும்.
அதே போல் உயரமும் சிவிங்கிப்புலிகள் 3.7-4.6 அடி உயரம் இருக்கும். சிறுத்தைகள் 3.6 அடி வரை மட்டும் இருக்கும்.
குட்டி :
சிறுத்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட பிறப்பு காலம் இல்லை. சிறுத்தைகளின் கர்ப்ப காலம் 90 முதல் 105 நாட்கள் வரை இருக்கும். சிறுத்தை பொதுவாக இரண்டு குட்டிகளைப் பெற்றெடுக்கின்றன. இந்த குட்டிகள் மந்தமான சாம்பல் நிற பூச்சுடன் பிறக்கின்றன.
சிவிங்கிப்புலிகளின் கர்ப்ப காலம் 90 - 98 நாட்கள். பொதுவாக மூன்று முதல் நான்கு குட்டிகள் வரை பிறக்கும். பிறக்கும் போது சிவிங்கிப்புலி, சிறிதாய் இரண்டின் குட்டிகளுக்கும் கண் தெரியாது. 10 நாட்களுக்குப் பிறகு தான் பார்வைத் திறன் வரத் தொடங்கும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Leopard