நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவராக பதவியேற்கும் நாட்டின் முதல் பழங்குடியினப் பெண் இவரே. புதிய குடியரசுத் தலைவரை வரவேற்க அவரின் அதிகாரப்பூர்வமான இருப்பிடமான குடியரசுத் தலைவர் மாளிகை மும்முரமாக தயாராகிவருகிறது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அடுத்த 5 ஆண்டுகள் வசிக்கப்போகும் குடியரசுத் தலைவர் மாளிகை குறித்த சில சுவாரஸ்சிய தகவல்கள் இதோ..
குடியரசுத் தலைவர் மாளிகை நாட்டின் விடுதலைக்கு முன்னரே கட்டப்பட்டது. விடுதலைக்கு முன்னர் வைசராய் ஹவுஸ் என்ற பேரில் இது அழைக்கப்பட்டது
நாட்டின் மிகப்பெரிய வசிப்பிடமான இதை குடியரசுத் தலைவர் அரண்மனை எனவும் அழைப்பார்கள்.இத்தாலியில் உள்ள குரினல் அரண்மனையை அடுத்து பெரிய அரண்மையாகக் கருதப்படுகிறது
இதன் கட்டுமானப் பணிகள் 1912ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் கழித்து, 1929ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. சார் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் என்பவரால் இது வடிவமைக்கப்பட்டது
குடியரசுத் தலைவர் மாளிகை கட்டுமானத்திற்கு கோடிக்கணக்கில் செங்கற்களும், 30 லட்சம் கன அடி கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுமானப் பணியில் சுமார் 29 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்
மவுன்ட்பேட்டனுக்குப் பின் நாட்டின் வைசராய்யாக பொறுப்பேற்ற ராஜாஜி தான் இந்த குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர். பின்னர், 1950இல் நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் பொறுப்பேற்ற பின்னர் தான் இது குடியரசுத் தலைவர் மாளிகை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
குடியரசுத் தலைவர் மாளிகையின் மொத்த பரப்பளவு 330 ஏக்கராகும். இங்கு 300க்கும் ஏற்பட்ட அறைகள், மண்டபங்கள், அலுவலகங்கள் உள்ளன.750 ஊழியர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள்
இங்கு எத்தனையோ அறைகள் மண்டபங்கள் இருந்தாலும் தர்பார் ஹால், அசோகா ஹால் முக்கியமானவை.இந்த தர்பார் ஹாலில் 4ஆம் நூற்றாண்டு உருவாக்கப்பட்ட கவுதம புத்தரின் புராதான சிலை உள்ளது
500 பேர் அமரக்கூடிய தர்பார் ஹாலில் தான் நாட்டின் முதல் பிரதமராக 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 பண்டிதர் ஜவஹர்லால் நேரு பதவியேற்றுக்கொண்டார்
அசோகா ஹாலில் தான் பிரதமர், அமைச்சர்கள் ஆகியோரின் பதவியேற்பு விழா உள்ளிட்ட முக்கிய அரசு விழாக்கள் நடைபெறும். இங்குள்ள முகலாயர்கள் தோட்டம் மிகவும் பிரபலம் வாய்ந்தது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இங்கு உதயனோத்சவ் என்ற விழா நடைபெறும்
எளிமையை தாரக மந்திரமாக கருதும் அண்ணல் காந்திக்கு குடியரசுத் தலைவர் மாளிகையின் ஆடம்பரமும் படாடோபமும் பிடிக்கவில்லை. இதை மக்களுக்கு பயன்படும் மருத்துவமனையாக மாற்றி விடலாம் என்றார் காந்தி
Published by:Kannan V
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.