ஆளுநர் மாளிகையில் பூத்த ஆர்கிட் மலர்கள்... ட்வீட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கிரண்பேடி!

இரண்டு மாதங்களுக்கு முன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அரவிந்தர் ஆசிரம தாவரவியல் பூங்காவில் இருந்து ஆர்கிட் செடி பரிசாக அளிக்கப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அரவிந்தர் ஆசிரம தாவரவியல் பூங்காவில் இருந்து ஆர்கிட் செடி பரிசாக அளிக்கப்பட்டது.

  • Share this:
தனக்கு வழங்கப்பட்ட ஆர்டிக் செடியில் பூக்கள் பூத்திருப்பதை கிரண்பேடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தலைநகரமான புதுச்சேரியில் ராஜ் நிவாஸ் ஆளுநர் மாளிகை அமைந்திருக்கிறது. யூனியன் பிரதேசம் என்பதால் இங்கு  துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகி. இவரது அதிகாரப்பூரவ அரசாங்க வசிப்பிடமாக ராஜ் நிவாஸ் விளங்குகிறது.

முற்காலத்தில் பிரெஞ்சு இந்தியா அரசாங்கத்தின் ஆளுநர்களின் அரசாங்க வசிப்பிடமாக இவ்விடம் இருந்துள்ளது. பிரெஞ்சு மற்றும் இந்திய கட்டடக் கலையின் பிரதிபலிப்பாக ராஜ் நிவாஸ் உள்ளது. சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில்போது மக்களுக்காக இந்த மாளிகை திறக்கப்பட்டு வண்ண மலர்கள் மற்றும்  விளக்குகளால் பொலிவூட்டப்படும். இதற்காகவே ராஜ் நிவாசில் வகை வகையான செடிகள் வளர்க்கப்படுகின்றன.

அந்த வகையில் இரண்டு மாதங்களுக்கு முன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அரவிந்தர் ஆசிரம தாவரவியல் பூங்காவில் இருந்து ஆர்கிட் செடி பரிசாக அளிக்கப்பட்டது. இதில் முதல்முறையாக பூக்கள் பூத்திருப்பதை கிரண்பேடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

Also see:
Published by:Rizwan
First published: