ஹோம் /நியூஸ் /இந்தியா /

சினிமா காட்சியை உண்மை என நம்பி பகிர்ந்த கிரண் பேடி! கலாய்த்த நெட்டிசன்கள்..

சினிமா காட்சியை உண்மை என நம்பி பகிர்ந்த கிரண் பேடி! கலாய்த்த நெட்டிசன்கள்..

கிரண்பேடி

கிரண்பேடி

அந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப் ஃபார்வர்டாக வந்த சினிமா காட்சி என்றும், அதனை உண்மை என நம்பி பகிர்ந்துள்ளதாக பலரும் கிரண் பேடியை விமர்சித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சினிமா காட்சியை உண்மை என நம்பி ட்விட்டரில் பகிர்ந்த கிரண் பேடி சமூகவலைதளங்களில் நெட்டிசன்களால் கேலிக்கு உள்ளாகியுள்ளார்.

புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநராக இருந்தவர் கிரண் பேடி. இவர் ஆளுநராக இருந்த போது, புதுச்சேரியில் அரசு பணிகளை செய்யவிடாமல் தொடர்ந்து அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக அப்போது முதல்வராக இருந்த நாராணயணசாமி குற்றம்சாட்டி வந்தார். தொடர்ந்து, கிரண் பேடியை துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அவர் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் புகார் மனுவையும் கொடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிரண் பேடி விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு பதிலாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பை ஏற்பார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சர்ச்சைகளுக்கு பெயர் போன கிரண் பேடியின் பெயர் எந்த சமூக வலைதங்களிலும், ஊடங்களிலும் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில், இன்று சினிமா காட்சியை உண்மை என நம்பி ட்விட்டரில் பகிர்ந்த கிரண் பேடி சமூகவலைதளங்களில் நெட்டிசன்களால் கேலிக்கு உள்ளாகினார்.

தொடர்ந்து, அந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப் ஃபார்வர்டாக வந்த சினிமா காட்சி என்றும், அதனை உண்மை என நம்பி பகிர்ந்துள்ளதாக பலரும் விமர்சித்தனர்.

தொடர்ந்து, பலரும் விமர்சனம் செய்த பின்னர், வீடியோவின் உண்மை ஆராயப்பட வேண்டும். இருந்தாலும் பயங்கரமாக இருக்கிறது எச்சரிக்கையுடன் பாருங்கள் என மீண்டும் பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Kiran bedi