‘புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பானது எனது வாழ்நாள் அனுபவம்’ - கிரண்பேடி

‘புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பானது எனது வாழ்நாள் அனுபவம்’ - கிரண்பேடி

கிரண்பேடி

புதுச்சேரியில் எனது பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி. புதுச்சேரி மக்கள் மற்றும் அனைத்து பொது அதிகாரிகளும் நன்றி.

 • Share this:
  புதுச்சேரி துணைநிலை ஆளுநராக 2016ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற கிரண்பேடி, நேற்று அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது, "புதுச்சேரி துணை ஆளுநராக பணியாற்றிய இந்த வாழ்நாள் அனுபவத்திற்கு இந்திய அரசுக்கு நன்றி. என்னுடன் நெருக்கமாக பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

  இந்த பதவிக்காலத்தில், புதுச்சேரி ராஜ்நிவாஸ் குழு (Team Rajnivas) பெரிய பொது நலனுக்குச் சேவை செய்ய விடாமுயற்சியுடன் பணியாற்றியது என்பதை உணர்வுப்பூர்வமாகக் கூறிக் கொள்கிறேன். நடந்த அனைத்துமே எனது அரசியலமைப்பு மற்றும் தார்மீக பொறுப்புகளை நிறைவேற்றும் கடமையாகும்.

  Must Read : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி விடுவிப்பு... தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு

   

  புதுச்சேரியில் எனது பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி. புதுச்சேரி மக்கள் மற்றும் அனைத்து பொது அதிகாரிகளும் நன்றி. புதுச்சேரிக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இது இப்போது மக்களின் கையில் உள்ளது. வளமான புதுச்சேரிக்கு வாழ்த்துக்கள்," எனக் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: