புதுச்சேரி தர்ணா போராட்டம்! நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்

மேலும் அந்த கடிதத்தில் அதற்கான பதில் தேவை என்றும் அவர் குறிப்பிடவில்லை, பதில் கிடைக்காவிட்டால் தர்ணாவில் ஈடுபடுவோம் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடவில்லை.

news18
Updated: February 14, 2019, 2:49 PM IST
புதுச்சேரி தர்ணா போராட்டம்! நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்
கிரண் பேடி
news18
Updated: February 14, 2019, 2:49 PM IST
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவதுதான் ஒரு முதல்வர் போராட்டத்தில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது.

இந்தநிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கிரண்பேடி சென்னை வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘புதுச்சேரி மாநில முதலமைச்சரின் தர்ணா செயல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. புதுச்சேரி ஒரு அழகான மாநிலம் அங்கு அதற்கு பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரது கவனமும் ஒவ்வொரு நிமிடமும் அந்த மாநிலத்திற்கு தேவை. நேரத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்தாமல் தர்ணாவில் ஈடுபட்டு வீணடித்து வருகிறார் முதலமைச்சர்.

மக்கள் நலனுக்காக இருக்கும் திட்டங்களில் கையொப்பம் இடவில்லை என்று நாராயணசுவாமி கூறுவது உண்மையான தகவல் அல்ல. பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் மத்திய அரசு நியமித்துள்ள ஆளுநர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கூறும் கருத்து தவறானது.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசுவாமி ஏழாம் தேதி எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் எனக்கு எட்டாம் தேதி கையில் கிடைத்தது. 3 பக்கம் உள்ள அந்த கடிதத்தில், 36 விஷயங்களைக் குறிப்பிட்டு இருந்தார். மேலும் அந்த கடிதத்தில் அதற்கான பதில் தேவை என்றும் அவர் குறிப்பிடவில்லை, பதில் கிடைக்காவிட்டால் தர்ணாவில் ஈடுபடுவோம் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடவில்லை. இதனிடையே அந்தக் கடிதத்திற்கு பதில் வேண்டும் என்று தர்ணாவில் தற்போது அமர்ந்துள்ளார்.

அப்பகுதி எஸ்பியிடம் முதலமைச்சரின் கோரிக்கைகள் என்ன என்று கேட்க சொல்லி அனுப்பி இருந்தேன். அதற்கு நாராயணசுவாமி முறையான பதில் கூறவில்லை. அதன் பின்னர், நானே அவருக்கு கடிதம் எழுதி வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு என்னை நேரில் வந்து சந்திக்கும்படி அவரை கேட்டுக்கொண்டேன்.

அதற்கும் அவர் 21ம் தேதி தர்ணாவில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில மக்களை ஹெல்மெட் அணிய விடாமல் தடுத்து வருகிறார் நாராயணசுவாமி. இது நீதிமன்ற அவமதிப்பாகும். மூன்று நாளில் ஒருவர் சாலை விபத்தினால் புதுச்சேரியில் உயிரிழக்கிறார்.
Loading...
மக்களுக்காக சேவை செய்யும் மூத்த அதிகாரிகள் ரோட்டில் இறங்கி வேலை செய்வதை இதுவரை யாரும் பார்க்காததால் தான், இது தவறாக தெரிகிறது. நான் என் கடமையை தான் செய்கிறேன்’ என்று தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமிக்கு எதிர்கட்சிகள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், புதுச்சேரியின் நிலை குறித்து நாராயணசாமிடம் ராகுல் காந்தி போனில் விசாரித்துள்ளார்.

Also see:
First published: February 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...