புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வென்றது. இதையடுத்து மத்திய அரசு துணைநிலை ஆளுநராக கிரண்பேடியை நியமித்தது. அதைத்தொடர்ந்து முதல்வராக நாராயணசாமி பொறுப்பு ஏற்றார். புதுச்சேரி வளர்ச்சி பெறும் என்று மக்கள் நம்பியிருந்த நிலையில், ஆளும் அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையில் மோதல் தொடங்கியது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் இருக்கும் போது, கள ஆய்வினை துணைநிலை ஆளுநர் தொடங்கினார். இதனால் முதல்வர் நாராயணசாமி அதிருப்தியடைந்தார். மோதல் ஒருகட்டத்தில் முற்றி துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பாக முதல்வர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டார்.
அதையடுத்து கிரண்பேடி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதன்பிறகும் நிலைமை சீராகவில்லை. இச்சூழலில் கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்தன. அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையை சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டன. இதனால், கடும் அதிருப்தியடைந்தனர்.
மேலும் படிக்க...மீன் குழம்பு வைக்காத மனைவியை கோடரியால் வெட்டிய கணவன்
அதைத்தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு கடுமையாக நடைமுறைப்படுத்தியதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநருக்கு எதிராக தர்ணா, கையெழுத்து இயக்கம் ஆகியவற்றை காங்கிரஸார் நடத்தினர். மேலும் பலமுறை கிரண்பேடியை நீக்க வேண்டும் என்று நாராயணசாமி கோரிக்கை விடுத்து வந்தார்.
இதனிடையே தங்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடியை மத்திய அரசு நீக்கியிருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கிரண்பேடியை நீக்கியுள்ளதை வரவேற்பதாகவும், மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் செயல்பட்ட கிரண்பேடி நீக்கப்பட்டது புதுச்சேரி மக்களின் வெற்றி என்றும், நாராயணசாமி தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.