முன்னாள் அமைச்சர் கைது - தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்திய சந்திரபாபு நாயுடு

தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்திய சந்திரபாபு நாயுடு

ஆந்திர முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து சந்திரபாபுநாயுடு, தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

 • Share this:
  தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு மருந்து மற்றும் உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.

  இது தொடர்பாக அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அச்சம் நாயுடு இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

  இது அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம் சாட்டிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தமது ஆதரவாளர்களுடன் அமரவாதியில் உள்ள வீட்டின் முன்பு தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இவர்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

  Also read... டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கா? மத்திய அரசு விளக்கம்
  Published by:Vinothini Aandisamy
  First published: