கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லின், பத்மா ஆகிய இரு பெண்களும் லாட்டரி விற்று தொழில் செய்து வந்தனர். கடந்த ஜுன் மாதத்தில் இருந்து ரோஸ்லினும், செப்டம்பர் மாதத்தில் இருந்து பத்மாவையும் காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் காவல் நிலையங்களில் தனித்தனியாக புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு பெண்களின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, இருவரின் செல்போன்களும் கடைசி சிக்னலாக பத்தனம்திட்டா அருகே திருவல்லா என்ற பகுதியை காட்டியது. அவர்களின் செல்போன் எண்ணிற்கு கடைசியாக போலி மந்திரவாதியான முகமது ஷபி என்பவர் பேசியிருப்பதும் தெரியவந்தது.
உடனே முகமது ஷபியை போலீசார் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களையும் நரபலி கொடுத்த அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்தார்.இந்த நரபலி கொலையானது திருவல்லா அருகே இலந்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆயுர்வேத வைத்தியர் பகவல்சிங் - லைலா தம்பதி ஆகியோருக்காக நடந்துள்ளது. இந்த தம்பதி பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையால் முகமது ஷபி என்ற போலி மந்திரவாதியிடம் யோசனை கேட்டு இந்த கொடூர கொலைகளை இவர்கள் செய்துள்ளனர்.
பகவல் சிங்கை அக்டோபர் 11ஆம் தேதி காவல்துறை கைது செய்துள்ள நிலையில், பகவல் சிங்கின் செயல் அப்பகுதியைச் சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. காரணம், பகவல் சிங் பாரம்பரிய மருத்துவத் தொழில் செய்வதுடன் அப்பகுதியில் தன்னை சமூக ஆர்வலர்ளாக காட்டிக்கொண்டு பல பணிகளை செய்துள்ளார். இவர் யாரிடமும் அதிர்ந்து கூட பேச மாட்டார் என பகவல் சிங்கின் அண்டை வீட்டார் தெரிவிக்கின்றனர். பகவல் சிங் மற்றும் லைலா தம்பதி நன்கு படித்த பண்பான குடும்பமாகவே அப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். இவரின் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பாரம்பரிய மருத்துவத்துறையில் சேவை செய்து வருகின்றனர். பகவல் சிங் மார்க்சிஸ்ட் கட்சி பணியில் ஈடுபாடு கொண்டவர் எனக் கூறப்படும் நிலையில், கட்சி தரப்பு இதை மறுத்துள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் நரபலி பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சம்பவம்.. பெண் பிடியில் சிக்கிய சிறுவன்.. வீட்டை சூறையாடிய மக்கள்
பகவல் சிங் பேஸ்புக்கிலும் மிக பிரபலமாகவும் ஆக்டிவாகவும் இருந்துள்ளார். இவருக்கு பேஸ்புக்கில் 1,100 பாலோயர்கள் இருந்துள்ளனர். பேஸ்புக்கில் அடிக்கடி ஜப்பானிய ஸ்டைல் ஹைக்கூ கவிதைகளை எழுதி பதிவிடுவார். கடைசியாக இவர் அக்டோபர் 6ஆம் தேதி அதாவது இரண்டாவது கொலை நடந்த காலகட்டத்தில் மர்ம ஹைக்கூ கவிதையை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதில், "ஓர் உலை, ஒரு கருமனின் மனைவி வேலை பார்க்கிறார். அந்த பெண்ணின் உடல் வலைகிறது."இவ்வாறு அந்த கவிதையை பதிவிட்டுள்ளார். நன்கு படித்த சாதுவான சமூக ஆர்வலர் போல உலகிற்கு தோற்றமளிக்கும் நபர் இதுபோன்ற கொடூர நரபலி சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Facebook, Human Sacrifice, Kerala