புதிய கல்வி கொள்கை புதிய இந்தியாவுக்கு அடித்தளம் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவுக்கான அடித்தளமாக திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  டெல்லியில் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் என்ற மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

  அப்போது, கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவந்தால் தான் மாணவர்களின் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்த முடியும் என்றார். உயர் கல்வியில் மாணவர்கள் விரும்பும் படிப்புகளை பயில வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், வலிமை மிக்க தேசமாக இந்தியா உருவாக புதிய கல்வி கொள்கை வழிவகுக்கும் என்றும் கூறினார்.

  ஆர்வம் மற்றும் திறமையை கண்டறிந்து ஒருங்கிணைப்பது அவசியம் என்று கூறிய மோடி, சவாலான மற்றும் புதுமையான சிந்தனைகளை இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

  Also read... EIA 2020 வரைவை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? மத்திய அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

  தரமான கல்வியை வழங்கும் நிறுவனங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும்போது கல்வியின் தரம் உயர்வதுடன், உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.  உலக மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவில் கல்வித்துறையில் மாற்றம் கொண்டுவருவது தவிர்க்க முடியாதது என்றும் பிரதமர் தெரிவித்தார். தாய்மொழியிலேயே கல்வி கற்பதன் மூலம் மாணவர்கள் சிறப்பாக கற்க முடியும் என்று அவர் கூறினார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: