ஹோம் /நியூஸ் /இந்தியா /

பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணை, பெண்களே ஊர்வலமாக அழைத்துச் சென்று அடி உதை - டெல்லியில் கொடூரம்... வீடியோ

பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணை, பெண்களே ஊர்வலமாக அழைத்துச் சென்று அடி உதை - டெல்லியில் கொடூரம்... வீடியோ

Rape

Rape

உடைகளை கிழித்து, தலைமுடியை வெட்டி, முகத்தில் கருப்பு மை பூசி ஊர்வலம் அழைத்துச் சென்றபோது அங்கு கூடியிருந்த பெண்கள் உள்ளிட்டோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பெண் ஒருவரை சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரின் தலைமுடியை வெட்டி, அடித்து துன்புறுத்தி, ஆடைகளை கிழித்து வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பெண் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட போது, பெண்கள் பலர் ஒன்றாக கூடி கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

  டெல்லியின் ஷாதரா பகுதியில் குடியரசு தினமான நேற்று பட்டப்பகலில், பலர் முன்னிலையில், பெண் ஒருவர் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, அடித்து உதைத்து பெண்களாலேயே  ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரின் உடைகளை கிழித்து, தலைமுடியை வெட்டி, முகத்தில் கருப்பு மை பூசி ஊர்வலம் அழைத்துச் சென்றபோது அங்கு கூடியிருந்த பெண்கள் உள்ளிட்டோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

  அந்த பெண் ஏற்கனவே சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஊர்வலம் அழைத்து வரப்பட்ட தகவல் மேலும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான அப்பெண்னை இந்த அளவுக்கு அவமதித்தது மனிதநேயமற்ற நிகழ்வாக இருந்தது.

  இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி போலீசாருக்கு தகவல் அளிக்கவே அங்கு வந்த டெல்லி போலீசார், அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளது.

  Also read:   சூப்பர் ஹூரோ 'மின்னல் முரளி' உடையில் திருமண போட்டோ ஷூட் நடத்திய மணமகன்!

  போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த பெண் முன்விரோதம் காரணமாக தாக்குதலுக்கு ஆளானதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

  பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை, அந்தப் பகுதி இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் அந்த இளைஞர் தற்கொலை செய்து உயிரிழந்தார். அவரின் மரணத்துக்கு இந்த பெண் தான் காரணம் என அந்தப் பகுதியினர் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் அப்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர்.

  Also read:  விளையாடச் சென்ற 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மைனர் சிறுவர்கள்!!

  அதன் பின்னரே, அந்தப் பகுதி பெண்கள் கும்பலாக சேர்ந்து, அப்பெண்ணை தாக்கி, ஆடைகளை கிழித்து, அடித்து உதைத்து வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதனை அங்கிருந்த பெண்கள் உள்ளிட்டோர் கைதட்டி ஆரவாரமாக கொண்டாடியிருக்கின்றனர்.

  இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 4 பெண்களை கைது செய்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் டெல்லி துணை ஆணையர் சத்திய சுந்தரம் தெரிவித்தார்.

  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Arun
  First published:

  Tags: Crime News, Gang rape, Rape, Viral Video