KHATTAR GOVT DEFEATS CONGRESS NO CONFIDENCE VOTE IN HARYANA ARU
ஹரியானாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பாஜக!
மனோகர் லால் கட்டார்,
ஹரியானாவில் பாஜகவுக்கு 40 எம்.எல்.ஏக்களும், ஜனநாயக் ஜனதா கட்சிக்கு 10 எம்.எல்.ஏக்களும், சுயேட்சைகள் 5 பேரின் ஆதரவும் என பாஜக கூட்டணியின் பலம் 55 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 31 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியில் ஹரியானா சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
90 இடங்களைக் கொண்ட ஹரியானாவில் பாஜக மற்றும் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. ஹரியானாவில் பாஜகவுக்கு 40 எம்.எல்.ஏக்களும், ஜனநாயக் ஜனதா கட்சிக்கு 10 எம்.எல்.ஏக்களும், சுயேட்சைகள் 5 பேரின் ஆதரவும் என பாஜக கூட்டணியின் பலம் 55 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 31 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பாஜக கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சைகள் விலக்கிக்கொண்டதால் மனோகர் லால் கட்டார் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீர்மானம் கொண்டு வந்தது. டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள சில எம்.எல்.ஏக்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினர். இருப்பினும் விவசாயிகள் போராட்டம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே காங்கிரஸ் கருதியது
இந்த நிலையில் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக 6 மணி நேரம் முதல்வர் மனோகர் லால் கட்டார் உரையாற்றினார். இதன் முடிவில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக கூட்டணி 55 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 32 வாக்குகள் மட்டுமே பெற்றது.