காக்கி ஸ்டூடியோ - ஜேம்ஸ் பாண்டு தீம் வாசித்த மும்பை காவல்துறையினர்!

mumbai police

1962ல் வெளியான பாண்ட் படத்தில் இந்த குறிப்பிட்ட தீம் உள்ளது. அதனை தான் தற்போது மும்பை போலீசார் இசைத்துள்ளனர்.

  • Share this:
மும்பை காவல்துறையை சேர்ந்த காவலர்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் நகைச்சுவையான போஸ்டுகள் மற்றும் விழிப்புணர்வை பரப்பும் வகையில் வித்தியாசமான வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் சமீபத்திய பதிவு ஒன்றில், மும்பை போலீசார் தங்களது பணியை சிறப்பாக செய்வது மட்டுமின்றி, நாட்டின் முன்னணி இசைக்குழுக்கள் போல ஒன்றாக அமர்ந்து பேண்ட் வாத்தியங்கள் செய்வது தெரிகிறது. தங்களது ட்விட்டர் மற்றும் யூடியூபில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், காக்கி ஸ்டுடியோ என்ற மான்டி நார்மனின் 'ஜேம்ஸ் பாண்ட் தீம்' இசைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

மும்பை காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "மும்பை காவல்துறையின் இசைக்குழு! உங்களுக்கு வழங்குவது ‘காக்கி ஸ்டுடியோ’ - மான்டி நார்மனின் ‘ஜேம்ஸ் பாண்ட் தீம்’-க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சிறப்பு வீடியோவை கான்ஸ்டபிள் ஜமீர் ஷேக் ஏற்பாடு செய்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோவில், அதிகாரிகள் கிளாரினெட், எக்காளம், சாக்ஸபோன் மற்றும் ட்ரோம்போன் உள்ளிட்டவர்கள் தங்கள் இசை கருவிகளுடன் தீம் இசையை வாசிப்பதை காண முடியும்.

1962ல் வெளியான பாண்ட் படத்தில் இந்த குறிப்பிட்ட தீம் உள்ளது. அதனை தான் தற்போது மும்பை போலீசார் இசைத்துள்ளனர். மிகவும் அழகாக மும்பை போலீசார் இசைப்பதையும், இடையே ஜேம்ஸ் பாண்டின் சில காட்சிகளும் உள்ளது. இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கமெண்ட்ஸ் செய்துள்ள ட்விட்டர் யூசர்கள்,  காவல்துறை அதிகாரிகளை பாராட்டியுள்ளனர். மேலும் இதுபோன்ற வீடியோக்களை தொடர்ந்து ஷேர் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வீடியோவை இதுவரை 5000 பேர் பார்வையிட்டுள்ளனர் மேலும் ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் செய்துள்ளனர்.

மும்பை காவல்துறையினரை நினைத்து நாம் மிகவும் பெருமைப்படுவதாக ஒரு யூசர் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் காவல்துறையின் இசைக்கும் பேண்ட் மிகவும் சிறப்பாக உள்ளது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என தெரிவித்துள்ளார். இதேபோல ஏராளமானோர் தங்களது கருத்துக்களை கமென்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீப காலமாக காவல்துறை நமது நண்பன் என்று சொல்லும் அளவுக்கு மும்பை காவல்துறை சோசியல் மீடியாவில் பல வேடிக்கையான பதிவுகளை வெளியிடுவதிலும், அதனை மற்ற விஷயங்களுடன் தொடர்புபடுத்தி காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் முனைப்போடு செயல்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த வித்தியாசமான முயற்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பது, சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்து பல நகைச்சுவையான ட்ரோல் மற்றும் மீம் மூலம் விழிப்புணர்வை மும்பை காவல்துறை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: