மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை உடனடியாக வழங்கப்படும் எனவும், நீட், ஜே.இ.இ, CUET உள்ளிட்ட தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வு கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி. கட்டணம் நீக்கப்படுவதாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் 49வது கூட்டம், டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.
இதில் பென்சில்ஷார்ப்னர் மீதான ஜிஎஸ்டி, 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. திரவ வெல்லத்தின் மீது ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் பேக்கேஜிங் செய்யப்படும் வெல்லத்திற்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை உடனடியாக கொடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டிற்கு 1,201 கோடி ரூபாய் இழப்பீடு கிடைக்கும் என தெரிகிறது.
இதனிடையே, நீட், ஜே.இ.இ, CUET உள்ளிட்ட தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வு கட்டணங்களுக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி. கட்டணம் நீக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: GST council, Minister Palanivel Thiagarajan, Nirmala Sitharaman