பலாத்காரம் செய்து பெண்ணை கொன்ற வழக்கு: வீட்டில் பதுங்கியிருந்த அர்ச்சகர் கைது

பலாத்காரம் செய்து பெண்ணை கொன்ற வழக்கு: வீட்டில் பதுங்கியிருந்த அர்ச்சகர் கைது

மாதிரி படம்.

சம்பவம் நடந்த கிராமத்தில் தனது ஆதரவாளர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த பூசாரி சத்யானந்த்தை பாதவ்ன் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.

 • Share this:
  50 வயதுப் பெண்மணியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் முக்கியக் குற்றவாளி என்று கருதப்பட்ட சத்யானந்த் என்ற அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  சம்பவம் நடந்த கிராமத்தில் தனது ஆதரவாளர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த பூசாரி சத்யானந்த்தை பாதவ்ன் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.

  50 வயதுப் பெண்மணி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி ஞாயிறு இரவு கிராமத்தில் இந்தப் பெண்மணி வீட்டினருகே கொண்டு விட்டுச் சென்றனர். இதை பூசாரியும் அவரது கூட்டாளி இருவரும் செய்ததாகக் கூறப்படுகிறது. பிற்பாடு இந்தப் பெண்மணி மருத்துவமனையில் அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக பரிதாபமாகப் பலியானார்.

  இதில் தேடப்பட்ட மற்ற இரு குற்றவாளிகள் புதனன்று கைது செய்யப்பட்டனர், இதன் பிறகு கோயில் வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

  பலியான அந்த 50 வயது பெண்மணி தினமும் கோயிலுக்குச் செல்பவர் என்று கிராமத்தில் அவருக்குத் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். பூசாரி சத்யானந்த் கோயிலுக்குள் இருக்கும் அறையில் தங்கியிருப்பவர்தான். சத்யானந்த் இந்தக் கோயிலுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பாக வந்தவர் என்று கூறப்படுகிறது.

  இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவரும், தாங்கள் அந்தப் பெண் காயமடைந்ததைப் பார்த்து காப்பாற்றவே முயற்சி செய்தோம் என்று கூறியதாக பாதவ்ன் விசாரணை போலீஸ் அதிகாரி சங்கல்ப் ஷர்மா கூறுகிறார்.

  ஆனால் பலியான பெண்மணியின் குடும்பத்தினரோ, இருவரும் பொய் சொல்கின்றனர், அப்படி ஆபத்தில் இருந்ததைப் பார்த்தால் அக்கம்பக்கத்தினரையல்லவா அழைத்திருக்க வேண்டும். கடவுள் பக்தி மிகுந்த எங்கள் வீட்டுப் பெண் கோயிலுக்குள் இப்படிப்பட்ட துயரத்தை அனுபவித்ததை நினைத்துக் கூட பார்க்க முடியவிலை என்று தெரிவிக்கின்றனர்.
  Published by:Muthukumar
  First published: