Home /News /national /

இந்த கோழி இனத்துக்கு தேசிய அங்கீகாரம்!

இந்த கோழி இனத்துக்கு தேசிய அங்கீகாரம்!

Thalasherry hen

Thalasherry hen

தலைச்சேரி கோழி இனம் என்பது கேரளாவின் பதிவு செய்யப்பட்ட ஒரே நாட்டு கோழி இனம் ஆகும்.

    கேரளாவின் ஒரே ஒரு பதிவு செய்யப்பட்ட நாட்டு கோழி இனமான தலைச்சேரி கோழிக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

    கேரளாவின் திருச்சூரை அடுத்த மன்னூத்தி பகுதியில் கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் (KVASU) கீழ் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்ட மையம் (AICRP) செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் தலைச்சேரி கோழி இனம் குறித்த ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து தேசிய இன பாதுகாப்பு விருது (2021) கிடைத்துள்ளது.

    தலைச்சேரி கோழி இனம் என்பது கேரளாவின் பதிவு செய்யப்பட்ட ஒரே நாட்டு கோழி இனம் ஆகும்.

    தற்போது ஆறாவது தலைமுறையில் இருந்து வரும் தலைச்சேரி கோழி இனத்தின், பாதுகாப்பு பணிகளுக்காக மதிப்புவாய்ந்த ICAR-NABGR (விலங்கு மரபணு வளங்களின் தேசிய பணியகம்) விருது மன்னூத்தி மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    Also read:  தாயிடம் தகராறு செய்த உறவினரை படுகொலை செய்த 10, 11ம் வகுப்பு சிறுமிகள்

    தலைச்சேரி பகுதியில் இருந்து இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டு கோழிகளை பாதுகாத்து அது குறித்த ஆராய்ச்சிப் பணிகள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்டது. 7 ஆண்டுகளில் 7 தலைமுறை கோழிகள் உற்பத்தி ஆகி இருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையிலும் 650 முதல் 750 பெண் கோழிகளும், 150 முதல் 200 ஆண் கோழிகளும் இருக்கின்றன. ஆராய்ச்சி மற்றும் குஞ்சுகள் பொறித்தலுக்கு பின்னர் புதிய தலைமுறை கோழிகள் கிடைத்தவுடன் பழைய கோழிகள் அகற்றப்படும்.

    தொடர்ச்சியான கண்காணிப்பு, சரியான நேரத்திற்கு உணவளிப்பது, உரிய தடுப்பூசிகள் போடுதல் போன்ற நடவடிக்கைகளின் பலனாக இந்த மையத்தில் உள்ள தலைச்சேரி கோழி இனங்கள் 5 மாதங்களிலேயே முட்டையிட தொடங்கியிருக்கின்றன. அதே போல ஒவ்வொரு கோழியும் வருடத்திற்கு 160 முதல் 170 முட்டைகள் என்ற அளவில் முட்டை உற்பத்தியும் அதிகரித்திருக்கின்றன.

    Also read:  இந்த வங்கியில் 10,000க்கு மேல் வரவு வைத்தாலே இனி கட்டணம் வசூல் - 2022 ஜனவரி 1 முதல் புதிய விதி அமல்!

    பொதுவாக நாட்டு கோழி இனங்கள் முட்டையிடும் பருவத்தை எட்ட 6 முதல் 8 மாதங்கள் தேவைப்படும். அதே போல முட்டை உற்பத்தி வருடத்திற்கு 70 - 80 முட்டைகள் என்ற அளவிலேயே இருக்கும்.

    தலைச்சேரி கோழி இனம் அதனுடைய குறைவான உயரம், அதிக முட்டை எடை, நீண்ட அடைகாக்கும் தன்மை போன்றவற்றால் பிற நாட்டு கோழி இனங்களில் இருந்து தனித்தன்மை வாய்ந்தவையாக விளங்குகின்றன.

    Also read:  கனிமொழி - உதயநிதி இடையே அதிகார போட்டி?

    சில வாரங்களுக்கு முன்னர் மன்னூத்தி மையத்தில் உருவாக்கப்பட்ட புதிய கோழி இனமான திரிவேனி என்பது தலைச்சேரி, வெள்ளை லகான் மற்றும் ரோட் ஐலாந்து ரெட் ஆகிய கோழி இனங்களின் கலப்பு இனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தினர் தலைச்சேரி கோழி இனத்தின் மரபு குணங்களையும் கண்டறிந்தனர் என்பதும் தேசிய விருது கிடைக்க காரணமாக இருந்துள்ளது.

    தற்போது இம்மையத்திலிருந்து பொறிக்கப்பட்ட தலைச்சேரி குஞ்சுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் உயர் ரக தலைச்சேரி கோழி இனங்கள் பிற ஊர்களுக்கும் பரவி வருகிறது.
    Published by:Arun
    First published:

    Tags: Birds, Kerala

    அடுத்த செய்தி