நம் நாட்டில் இன்றும் 6 மணி ஆனால் பெண்கள் வீட்டுக்கு வந்து விட வேண்டும், இருட்டில் வெளியே திரிந்தால் ஆபத்து என்று சொல்லும் சமூக நிலை தான் உள்ளது.சிறுவயதில் காத்து கருப்பு அண்டிவிடும் என்று சொல்வது முதல் கற்பழிப்பு, கொலை பயம் வரை ஏதோ ஒரு காரணம் பெண்களை இரவில் வெளியில் போக விடாமல் தடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.
என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் பெண் சுதந்திரம் , பெண்ணியம் என்று பேசினாலும் பெண்களுக்கான உரிமைகளும் சுதந்திரமும் சூரியன் இருக்கும் வரை தான் என்று கேலியாய் சொல்வார்கள்.
நைட் ஷிப்ட் பார்க்கும் பெண்கள் எண்ணிக்கையும் குறைவு. இரவில் தனியாகவோ குழுவாகவோ கூட வெளியில் சுற்றி திரிய பார்ப்பதே அரிது . பாரதி சொன்ன புதுமை பெண்களும் கூட பகலில் மட்டும் தான் உலாவர முடியும் என்பது போல் இருக்கிறது. இதில் காந்தி சொன்ன ‘நகைகளோடு சுதந்திரமாக பயமின்றி பெண்கள் நடமாடும் சுதந்திர இந்தியா’ என்றைக்கு வர போகிறது என்று யோசிக்கும் நேரம் கேரளா ஒரு முன்னெடுப்பை கொண்டுவந்துள்ளது.
எப்போதுமே கூலா ஜாலியா இருக்கணுமா? இந்த 7 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
கேரள மாநிலத்தை சேர்ந்த மூவாட்டுப்புழா என்ற பகுதியின் எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன் ‘கேர்ள்ஸ் நைட் அவுட்’ என்ற புதிய முயற்சித் தொடங்கியுள்ளார்.கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள இந்த நகரத்தில் பெண்களுக்கான இசை நிகழ்ச்சிகள், ஜூம்பா நடனம் , தற்காப்பு பயிற்சி மற்றும் உணவு கடைகள் என்று பெண்களுக்கான போன்ற செயல்பாடுகள் நிறைந்த நான்கு நாள் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தது.
இருட்டிய பிறகு வெளியே செல்ல பெண்களை ஊக்குவிப்பதை இதன் நோக்கமாகும். MC சாலையில் அரை கிலோமீட்டர் தூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 11.30 மணி வரை நீடித்தது.
பூட்டானில் தொடங்கும் சவாலான அல்ட்ரா மராத்தான் ஸ்னோமேன் பந்தயம்..!
மேலும் இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வழக்கமாக, நகர மக்கள் இரவு 8 - 8.30 மணியளவில் கடைகளைமுடிபயிருப்பார்கள். கடந்த ஒரு வாரமாக, அவர்கள் இரவு 11.30 மணி வரை திறந்திருந்தனர். பெண்கள் வெளியே வந்து தங்கள் இரவு வாழ்கையை ஜாலியாக கொண்டாடினர்.
ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிகழ்வு குறித்து எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன், பெண்களுக்கான சுதந்திரத்தையும், இரவு நேரங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் நம் கடமை. இந்த முன்னெடுப்பை கேரளாவின் மற்ற பகுதிகளும் கொண்டுவர வேண்டும் என்று கூறினார். கேரளாவில் உள்ள மற்ற முற்போக்கு சங்கங்களும் இது போன்ற நிகழ்வுகளை நடத்த இருப்பதாக அறிவித்து வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Women safety