சுற்றுச்சூழல் தினத்தில் கஞ்சா செடிகளை நட்டு வைத்த இளைஞர்கள் - விசாரணையில் இறங்கிய கேரள போலீஸார்

மாதிரிப்படம்

சுற்றுச்சூழல் தினத்தில் கஞ்சா செடிகளையும் நட்டு வைத்த இளைஞர்களை கேரள போலீஸார் தேடி வருகின்றனர்.

 • Share this:
  உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் மரம் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். இதே ஜூன் 5-ம் தேதிகேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நட்ட செடிகளால் அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். சுற்றுச்சூழல் தினத்தில் செடி நடுவதெல்லாம் குற்றமா எனக் கேட்டால். ‘சார்... செடி நடுவது குற்றமல்ல கஞ்சா செடி நடுவது குற்றம்’ என பொங்குகின்றனர் உள்ளூர் போலீஸார்.

  கேரள மாநிலம் குறிஞ்சாடி கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜூன் 5-ம் இளைஞர்கள் சிலர் வந்து சாலை ஓரத்தில் இரண்டு செடிகளை நட்டு அதனை தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். அப்படி போட்டோ எடுக்கும்போது ‘இந்த செடி இங்கேயே வளரட்டும்’ என்று வசனம் வேறு பேசி சென்றுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனைப்பார்த்த உள்ளூர் மக்கள் சிலர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இரண்டு கஞ்சா செடிகளும் 30 செ.மீ மற்றும் 60 செ.மீ உயரத்தில் இருந்துள்ளது. இரண்டு செடிகளையும் காவல்துறையினர் அகற்றினர்.

  Must Read : குண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் நிறுவனம்.. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,300 கட்டணம்

  கஞ்சா செடிகளை நடவு செய்த நபர்கள் போலீஸாரிடம் பிடிபடவில்லை. கந்தசிரா பகுதியில் முன்பு கஞ்சா வழக்கில் சிக்கிய நபர் ஒருவர் கஞ்சா செடிகளை பராமரிப்பதாகவும் அந்த நபருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: