முகப்பு /செய்தி /இந்தியா / முடி உதிர்வால் மன உளைச்சல்.. ட்ரீட்மெண்ட் எடுத்தும் யூஸ் இல்லை.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

முடி உதிர்வால் மன உளைச்சல்.. ட்ரீட்மெண்ட் எடுத்தும் யூஸ் இல்லை.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

முடி உதிர்வால் தற்கொலை

முடி உதிர்வால் தற்கொலை

கிளினிக்கிலிருந்து மருந்துகளை உட்கொண்ட பிறகு அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியுள்ளது. நாட்கள் செல்ல செல்ல புருவ முடிகள் கூட உதிரத் தொடங்கியுள்ளன

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kozhikode, India

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அத்தோலியைச் சேர்ந்த 29 வயதான மெக்கானிக் ஒருவர், கடுமையான முடி உதிர்வைத் தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார்.

பிரசாந்த் மரணம் குறித்து விசாரணை நடத்த கோரி அத்தோலி போலீசில் குடும்பத்தினர் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து ஊரக எஸ்பியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விசாரணை திருப்திகரமாக இல்லை என உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், கோழிக்கோடு சேர்ந்த பிரசாந்த் என்பவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து தற்கொலைக்காளான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தான் பிரசாந்தின் தற்கொலைக் கடிதம் அத்தோலி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தான் அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வந்தது.

இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியில் மிதந்த பாதி எரிந்த 500 ரூபாய் நோட்டுகள்... போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

இதுகுறித்து விசாரணை அதிகாரி பி.கே.முரளி கூறுகையில் ‘தாமரச்சேரியில் உள்ள ஒரு வாகன ஷோரூமில் மெக்கானிக்காகப் பணிபுரிந்து வந்த பிரசாந்திற்கு ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக முடி கொட்டியதாக கோழிக்கோட்டில் சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். சிகிச்சை பலனளிக்காததால் தான் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது என்றார்.

நிகழ்வுகளின்படி பிரசாந்த் 2014 ஆம் ஆண்டு முதல் முடி உதிர்தல் பிரச்சினைக்காக கோழிக்கோட்டில் உள்ள தோல் சிறப்பு மையத்தில் சிறப்பு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். முதலில் மருத்துவரை பார்க்கும்போது முடி உதிர்வு பிரச்சனை மட்டுமே இருந்துள்ளது.

ஆனால் கிளினிக்கிலிருந்து மருந்துகளை உட்கொண்ட பிறகு அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியுள்ளது. நாட்கள் செல்ல செல்ல புருவ முடிகள் கூட உதிரத் தொடங்கியுள்ளன. இதனால் மனமுடைந்த பிரசாந்த் இது குறித்து மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.அப்போதும் மருத்துவர் அதே மருந்துகளை உட்கொள்ள பரிந்துரைத்துள்ளார்.

இதையும் படிங்க: டெங்கு பரவல்.. பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் லீவ்.. அதிரடி நடவடிக்கையில் அசாம் அரசு!

இதன் விளைவாக பெரும் மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது. விழாக்களில் கலந்துகொள்வதையும் நண்பர்களை சந்திப்பதையும் நிறுத்திவிட்டார். மேலும் அவரது முடி உதிர்வு பிரச்சினை அவரது திருமண முன்மொழிவுகள் நிராகரிக்கப்படுவதற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது. இதனால் பெரும் மனஉளைகளுக்கு ஆளாகியுள்ளார்..

மருத்துவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையின்படி, மருத்துவ அலட்சியம் எதுவும் இல்லை என்றும், வரும் நாட்களில் விசாரணை நடத்தப்படும் என்றும் விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

First published:

Tags: Kozhikode S11p05, Suicide