ஹோம் /நியூஸ் /இந்தியா /

டாக்டர் சொன்ன அட்வைசால் இருந்த முடியும் போச்சே.. மருத்துவர் பெயரை கடிதத்தில் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை!

டாக்டர் சொன்ன அட்வைசால் இருந்த முடியும் போச்சே.. மருத்துவர் பெயரை கடிதத்தில் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை!

தலைமுடிவு உதிர்வு : இளைஞர் தற்கொலை

தலைமுடிவு உதிர்வு : இளைஞர் தற்கொலை

மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஏற்கெனவே இருந்த முடியும் உதிர்ந்ததால் மக்களை எதிர்கொள்ள கடினமாக இருந்ததாக உயிரிழந்தவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  கேரளாவில் முடி கொட்டுவதால் விரக்தியடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கேரளா மாநிலம்  கோழிக்கோடு வடக்கு கன்னூரை சேர்ந்த பிரசாந்த் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவர் எழுதிய தற்கொலை கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் தலைமுடி உதிர்வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பெயர் இருந்துள்ளது.

  கடந்த 2014ஆம் ஆண்டு முதலே பிரசாந்த் முடி உதிர்தலுக்கான மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார். முதலில் முடி முழுவதுமாக உதிர்ந்துவிடும் பிறகு நன்றாக முடி வளரும் என மருத்துவர் கூறியதாகவும், அதனை நம்பி மருந்துகளை உட்கொண்டு வந்ததாகவும் அதில் எழுதியிருந்தது. தலையில் தொடங்கி, கை, கால், புருவங்கள் என அனைத்து இடங்களில் முடி உதிர்ந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு வெளியே நடமாட முடியாமலும், மக்களை எதிர்கொள்ள கடினமாக இருந்ததாலும், தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் எழுதியிருந்தார்.

  இந்த கடிதத்தை படித்த பிரசாந்தின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர். தொடர்ந்து இது குறித்து எஸ்பியிடம் புகார் அளித்ததாகவும், முதல்கட்ட விசாரணையில்  மருத்துவர் குற்றவாளி என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று போலீசார் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Hair fall, Kerala