ஹோம் /நியூஸ் /இந்தியா /

தலைமுடியில் அரிவாள் சுத்தியல் சின்னத்துடன் பினராயி விஜயன் வாக்குச் சாவடிக்குச் சென்ற மார்க்ஸிஸ்ட் தீவிரத் தொண்டர்

தலைமுடியில் அரிவாள் சுத்தியல் சின்னத்துடன் பினராயி விஜயன் வாக்குச் சாவடிக்குச் சென்ற மார்க்ஸிஸ்ட் தீவிரத் தொண்டர்

கேரளா இளைஞர்

கேரளா இளைஞர்

கேரளாவில் தலைமுடியில் சிகப்பு வண்ணத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள் சுத்தியல் சின்னத்தை வடிவமைத்து இளைஞர் ஒருவர் வாக்களிக்கச் சென்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்திய அளவில் இன்று ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் இன்று மூன்றாம் கட்டவாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது. கேரளாவில் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கேரளாவைப் பொறுத்தவரை ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தீவிரப் போட்டி நடைபெற்றுவருகிறது. பா.ஜ.கவும் கேரளாவில் எப்படியாவது கால்பதித்துவிட தீவிரமாக முயற்சித்துவருகிறது.

கேரளா முதல்வர் பினராயி விஜயன், எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மெட்ரோ மேன் ஸ்ரீதர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தங்களுடைய வாக்கைப் பதிவு செய்தனர். பினராயி விஜயன் பினராயி பகுதியிலுள்ள ஆர்.சி அமலா பள்ளியில் குடும்பத்துடன் சென்று வாக்கு பதிவு செய்தார்.

அதே பள்ளியில் வாக்குப் பதிவு செய்ய சென்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிரத் தொண்டர் ஒருவர், அவருடைய தலை முடியில் சிகப்பு வண்ண நிறத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள், சுத்தியலை வடிவமைத்து ஹேர்ஸ்டைலை உருவாக்கியிருந்தார். அவருடைய ஹேர்ஸ்டைல் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Election 2021, Kerala CM Pinarayi Vijayan