ஹோம் /நியூஸ் /இந்தியா /

உள்ளாடைக்குள் மறைத்து, ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திய கேரள இளம்பெண்.. ஏர்போர்ட்டில் கைது!

உள்ளாடைக்குள் மறைத்து, ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திய கேரள இளம்பெண்.. ஏர்போர்ட்டில் கைது!

கைதான இளம்பெண்

கைதான இளம்பெண்

Gold Smuggling Arrest : கடத்திவரப்பட்ட 1884 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

கேரள மாநிலம் காசர்கோட்டை பகுதியை சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஷகிலா துபாயிலிருந்து கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இவர் தனது உள்ளாடைக்குள் ஒரு கோடி மதிப்புடைய 1884 கிராம் தங்கத்தை தைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின்  பரிசோதனைகளில் சிக்காமல் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்துள்ளார். அதே நேரத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் இளம் பெண்ணிற்காக காத்திருந்த காசர்கோடு மாவட்ட காவல்துறையினர் ஷகிலாவை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது, அவரது உள்ளாடைக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் இளம்பெண்ணையும், தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் : சஜயகுமார் - கன்னியாகுமரி

First published:

Tags: Crime News, India, Kerala, Smuggling