முகப்பு /செய்தி /இந்தியா / கிரைண்டரில் துப்பட்டா சிக்கி பலியான இளம்பெண்.. பிறந்த நாளே இறந்த நாள் ஆன துயரம்!

கிரைண்டரில் துப்பட்டா சிக்கி பலியான இளம்பெண்.. பிறந்த நாளே இறந்த நாள் ஆன துயரம்!

உயிரிழந்த இளம்பெண்

உயிரிழந்த இளம்பெண்

Kerala Death | பிறந்தநாள் அன்று மகிழ்ச்சியாக வேலைக்கு சென்ற இளம்பெண் சடலமாக மீண்டும் வீட்டிற்கு வந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த போது துப்பட்டா கிரைண்டருக்குள் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு தலப்பாடி பகுதியை சேர்ந்த ரஞ்சன் - ஜெயஷீலா தம்பதியினருக்கு கடந்த வருடம் தான் திருமணம் ஆகியுள்ளது. இந்த நிலையில் ஜெயசீலா வீட்டின் அருகில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்தும் வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் வழக்கம் போல பேக்கரியில் உள்ள கிரைண்டர் ஒன்றில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டா கிரைண்டரில் சிக்கியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், தலையில் பலத்த காயங்களுடன் கதறி அழுதார். இதனை கண்ட சக ஊழியர்களை அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்த நாள் அன்றே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Death, Kerala