வரதட்சணை கொடுமை... பட்டினி போட்டு பெண்ணை கொலை செய்த கணவர், மாமியார்

வரதட்சணை கேட்டு பெண்ணின் கணவர் மற்றும் அவரது மாமியார் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கடந்த 5 வருடங்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளன

news18
Updated: March 31, 2019, 12:01 PM IST
வரதட்சணை கொடுமை... பட்டினி போட்டு பெண்ணை கொலை செய்த கணவர், மாமியார்
மாதிரிப் படம்
news18
Updated: March 31, 2019, 12:01 PM IST
கேரளாவில் வரதட்சணை கேட்டு பெண் ஒருவரை பட்டினி போட்டு அவரது கணவர் மற்றும் மாமியார் கொலை செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கொல்லம் அருகே கருங்கப்பள்ளி என்ற இடத்தில் துஷரா என்ற பெண் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போதே பெண் வீட்டார் பணம், நகை என வரதட்சணை கொடுத்துள்ளனர். 2 லட்சம் பின்னர் தருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு பெண்ணின் கணவர் மற்றும் அவரது மாமியார் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கடந்த 5 வருடங்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். சாப்பிட எதுவும் கொடுக்காமல், தண்ணீர் மட்டுமே கொடுத்து வந்துள்ளனர். இதனால் அவரது எடை 20 கிலோவாக குறைந்தது. உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சந்தேகத்தின் பேரின் போலீஸார் நடத்திய விசாரணையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பெண்ணின் கணவர் மற்றும் அவரது தாயை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் தாயார் போலீஸாரிடம், ‘எனது மகளை அவர்கள் பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. வரதட்சணை கேட்டு என்னுடைய மகளை கொடுமைப்படுத்தினார்கள். மகளின் வாழ்க்கையை எண்ணி புகார் கொடுக்காமல் விட்டுவிட்டோம்’ என்று கூறியுள்ளார் .

Also watch

First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...