9 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பெண்

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பெண் சிறுவனின் உறவினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது

News18 Tamil
Updated: February 11, 2019, 9:37 PM IST
9 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பெண்
மாதிரி படம்
News18 Tamil
Updated: February 11, 2019, 9:37 PM IST
கேரள மாநிலம் மலப்புரம் அருகே தேனிப்பள்ளம் பகுதியில் 9 வயது சிறுவனை உறவுக்கார பெண்ணே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் கடந்த வாரம் தேனிப்பள்ளம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளான். அப்போது, சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தவுடன் மருத்துவர்கள் உடனடியாக சைல்ட்கேருக்கு தெரிவித்தனர். சைல்ட் கேர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஓராண்டுக்கு மேலாக சிறுவன் பாலியல் தொந்தரவுக்கு ஆளானது தெரியவந்துள்ளது. இதனால் அந்த சிறுவன் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக சைல்டுகேர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பெண் சிறுவனின் உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கும், சிறுவனின் குடும்பத்திற்கு ஏற்கெனவே பிரச்னை இருந்து வந்ததாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முழுமையாக விசாரணை நடத்திய பின்னர்தான் உண்மைநிலை தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அண்மையில் எர்ணாகுளத்தில் 9 வயது சிறுவனை பெண் ஒருவர் பலாத்காரம் செய்து கைதாகிய சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குற்றச்செய்திகளை படிக்க கிளிக் செய்க

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...