இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசிச்சென்ற கொடூரம் - டிக் டாக் காதலன் கைது

மாதிரிப்படம்

டிக் டாக் மூலம் அறிமுகமான பெண்ணை தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நபரை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர்

 • Share this:
  டிக் டாக்கில் அறிமுகமான காதலனை தேடிவந்த பெண்ணை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

  கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த 28வயது இளம்பெண் ஒருவர் டிக்டாக் மூலம் அறிமுகமான காதலனை சந்திக்க 300 கிலோமீட்டர் பயணம் செய்த கோழிக்கோடு வந்துள்ளார். மதுபோதையில் காதலன் தன் நண்பர்களுடன் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அந்தப்பெண்ணுக்கு மது கொடுத்ததாக தெரிகிறது. மேலும் இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் இங்கு நடந்ததை எல்லாம் வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து வைத்துள்ளோம். அதனை இணையத்தில் வெளியிட்டு உன் மானத்தை வாங்கிவிடுவோம் என மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததால் அந்தப்பெண்ணை தனியார் மருத்துவமனை அருகே சாலையில் வீசிவிட்டு  அந்தப்பெண்ணை மிரட்டிச் சென்றுள்ளனர்.

  Also Read:  கல்யாணத்துக்கு பிறகு 25 ஆண்களுடன் ஓட்டம் பிடித்த பெண் – ஒவ்வொரு முறையும் ஏற்றுக்கொள்ளும் காதல் கணவன்

  அந்தப்பெண் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். மேலும் நடந்த விவரத்தை மருத்துவர்களிடம் கூறி கண்ணீர் வடித்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க காவல்துறை விசாரணையில் இறங்கியது. சிகிச்சைக்கு பின்னர் தற்போது அந்தப்பெண்ணின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. போலீஸார் விசாரணையில் காதலன் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

  Also Read: போதையில் மாடல் அழகி ரகளை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

  கேரள மாநில  கொல்லம் பகுதியைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு டிக் டாக் மூலம் அனஸ் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். டிக் டாக் பழக்கம் நாளடைவில் காதலாக  மாறியது. 2 ஆண்டுகளாக போனில் பேசி வந்துள்ளனர். அனஸ் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இருவராலும் நேரில் சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் தான் நடக்கப்போகும் விபரீதத்தை உணராமல் டிக் டாக் மூலம் அறிமுகமான காதலன் அனஸை காண்பதற்காக 300 கிலோமீட்டர் பயணம் செய்து கோழிக்கோடு வந்துள்ளார். அந்தப்பெண்ணை அனஸ்  ஒரு ஃப்ளாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மது அருந்துமாறு அந்தப்பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளார்.

  Also Read:  தாலியை கழற்றி சத்தியம்.. முந்திரிக்காட்டில் குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய மனைவி - நடந்தது என்ன?

  சிறுது நேரத்தில் அவர்கள் இருந்த வீட்டிற்கு அனஸ் நண்பர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் அந்தப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன்பின்னர் அதனை வீடியோவாக எடுத்த நபர்கள் இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் வீடியோ, போட்டோவை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர். காவல்துறையின் விசாரணையின் போது டிக் டாக் காதலின் மொபைல் எண் ,அவரது போட்டோ உள்ளிட்ட சில விவரங்களை கூறியுள்ளார். இதனையடுத்து அந்த நபரை போலீஸார் ட்ரேஸ் செய்து கைது செய்தனர். அனஸ் மற்றும் அவரது நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தப்பி ஓடிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதில் ஒருவர் குற்றப்பிண்ணனி உடைய நபர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Ramprasath H
  First published: