ஹோம் /நியூஸ் /இந்தியா /

’பூஜையில் நிர்வாணமாக பங்கேற்க வேண்டும்..’- மனைவியை வற்புறுத்திய கணவன்!  கேரளாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

’பூஜையில் நிர்வாணமாக பங்கேற்க வேண்டும்..’- மனைவியை வற்புறுத்திய கணவன்!  கேரளாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

நிர்வாண பூஜையில் பங்கேற்க கூறி இளம்பெண்ணுக்கு சித்தரவதை

நிர்வாண பூஜையில் பங்கேற்க கூறி இளம்பெண்ணுக்கு சித்தரவதை

பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமியார் லைஷூவை காவல்துறை கைது செய்துள்ள நிலையில், தலைமறைவான கணவர் சத்தியபாபுவை தீவிரமாக தேடிவருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kerala, India

  திருமணமான இரு மாதங்களிலேயே இளம்பெண்ணை நிர்வாண பூஜையில் பங்கேற்க வேண்டும் என கணவர் மற்றும் மாமியார் சித்தரவதை செய்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் லாட்டரி விற்று தொழில் செய்து வந்த ரோஸ்லின், பத்மா ஆகிய இரு பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

  இந்த நரபலி கொலையானது திருவல்லா அருகே இலந்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆயுர்வேத வைத்தியர் பகவல்சிங் - லைலா தம்பதி ஆகியோருக்காக நடந்துள்ளது. இந்த தம்பதி பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையால் முகமது ஷபி என்ற போலி மந்திரவாதியிடம் யோசனை கேட்டு இந்த கொடூர கொலைகளை இவர்கள் செய்துள்ளனர்.

  இந்த கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதன் தொடர்ச்சியாக கேரளாவில் இது போன்ற மாந்திரீக செயலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை அம்பலப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறிய புகாரின் படி, கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு சத்திய பாபு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு திருமணமான இரு மாதத்திலேயே இவரது கணவரும் மாமியாரும் பெண்ணின் உடலில் தீய சக்தி இருப்பதாகக் கூறி மந்திரவாதியிடம் அழைத்து சென்றுள்ளனர்.

  அந்த மந்திரவாதி பூஜை செய்வதாகக் கூறி மாந்திரீக நடவடிக்கை செய்ததுடன் இளம் பெண்ணை ஆடைகளை களைந்து நிர்வாண பூஜையில் பங்கேற்க வேண்டும் என்றுள்ளார். இதை செய்யுமாறு கணவர் சத்தபாபுவும், பெண்ணின் மாமியார் லைஷாவும் கட்டாயப்படுத்தியுள்ளனர். நிர்வாண பூஜையில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண்ணை கணவரும் மாமியாரும் சேர்ந்து அடித்து சித்தரவதை செய்துள்ளனர். இது போன்ற பூஜைகளுக்காக தன்னை கணவரும் மாமியாரும் தமிழ்நாட்டின் நாகூர், ஏர்வாடி போன்ற பகுதிகளுக்கு அழைத்து சென்றதாக பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: பிரபல ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா.. தம்பதிகளின் அந்தரங்கத்தை படம்பிடித்து மிரட்டிய 4 பேர் கைது

  தொடர்ந்து இதுபோன்ற பாலியல் சித்திரவதைகளுக்கும், மாந்திரீக பூஜை கொடுமைகளுக்கும் ஆளான இளம்பெண் கணவர் வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், நரபலி விவகாரம் அம்பலமாகி அனைவருக்கும் விழிப்புணர்வை உருவாக்கிய இந்த சூழலில் தனக்கு நேர்ந்த கொடூரத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தில் இளம்பெண் தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து மாமியார் லைஷூவை காவல்துறை கைது செய்துள்ளது. கணவர் சத்தியபாபு தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை தீவிரமாக தேடும் பணியில் காவல்துறை களமிறங்கியுள்ளது. அதேபோல், இந்த குற்றச்செயலில் தொடர்புடைய மந்திரவாதிகள் அப்துல் ஜபார் மற்றும் நிலாமல் சித்திக்கி என்ற இருவரையும் காவல்துறை தேடிவருகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Crime News, Kerala, Superstition